தமிழ்நாடு அரசு கேபிள் மூலம் வழங்கப்படும் இலவச செட்டாப் பாக்ஸ் குறித்து, காயல்பட்டினத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திடுமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் பெருவாரியான இடங்களில் - அரசு கேபிள் நிறுவனம் மூலமாக, குறைந்த விலையில் (மாதம் 70 ரூபாய்) தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்படுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் சேவை ஒளிபரப்பு அனுமதியையும் அரசு கேபிள் நிறுவனம் - கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசிடம் இருந்து பெற்றது.
அனுமதியை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள சுமார் 70 லட்ச சந்தாதாரர்களுக்கு இலவச SET TOP BOX வழங்கிட, உலகளவிலான டெண்டர் விடப்பட்டு, கடந்த வாரம் முதல் - இந்த SET TOP BOX கள் வழங்கப்பட்டு வருகிறது.
SET TOP BOX வழங்க அரசு எவ்வித கட்டணமும் வசூல் செய்யவில்லை. ஒரு முறை கட்டணமாக, ACTIVATION FEE என 200 ரூபாய் மற்றும் செலுத்த வேண்டும்.
மேலும் - மாத கட்டணம், ரூபாய் 125 அல்லது ரூபாய் 175 அல்லது ரூபாய் 225 அல்லது ரூபாய் 275 என தேவையான சேனல்கள் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு செலுத்தினால் போதும்.
நகரில் - அரசு கேபிள் பெற்றுள்ள பெருவாரியானவருக்கு தாங்கள் அரசு கேபிள் சந்தாதாரர்கள் என்ற விபரம் கூட அறியாத சூழல் நிலவுகிறது. இதனால் - அதிக விலை கொடுத்து, தனியார் நிறுவனத்தில் இணைப்பு பெற கட்டாயப்படுத்த படுகிறார்கள்.
எனவே - அரசின் இந்த சேவை குறித்து, நகரில் விழிப்புணர்வு ஏற்படுத்த - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, நேற்று (செப்டம்பர் 5) மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அம்மனு - கேபிள் டிவி தாசில்தாரின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 5, 2017; 1:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|