நிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 121 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 1 ஆயிரத்து 670 மதிப்பில், மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்து 070 ரூபாய் செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்ற பிரதிநிதி கே.எம்.டி.ஸுலைமான், சமூக ஆர்வலர்களான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.என்.முஹம்மத் உமர் ஆகியோரிணைந்து அப்பொருட்களைப் பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்
(பிரதிநிதி, சிங்கப்பூர் கா.ந.மன்றம்)
|