தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சூரிய சக்தி மூலம் (சோலார்) இயங்கும் பம்ப் செட்டுகள் 90 சதவிகித மானிய விலையில் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2017-18 நிதியாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி எண் : 110 ன் கீழ் அறிவித்தபடியும், எரிசக்தி துறை மானிய கோரிக்கை எண் : 14ன் அறிவிப்பின் படியும் விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கு தேவை அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு நடப்பாண்டில் இவ்வகை மோட்டார் பம்பு செட்டுகளை 90 சதவீத மானியத்தில் வழங்க உள்ளது.
இவற்றில் தமிழக அரசின் மானியம் 40 சதவீதமாகவும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் மானியம் 20 சதவீதமாகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மானியம் 30 சதவீதமாகவும் வழங்கப்படவுள்ளது. 10 சதவீதம் விவசாயிகளின் பங்குத் தொகையாக செலுத்தப்பட வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ,; மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு விவசாயிகள் ஏற்கனவே இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால், அதனை விலக்கிக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து கடிதம் வழங்க வேண்டும் அல்லது இலவச விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து, பதிவு மூப்புப்பட்டியல் வரிசையில் காத்திருந்து மூப்புப் பட்டியலில் இருந்து தங்களது விண்ணப்பத்தை நீக்கிக் கொள்ள சம்மத கடிதம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கண்ட நிபந்தணைகளுக்கு சம்மதிக்கக்கூடிய விவசாயிகள் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு, விபரங்கள் பெறுவதற்கும் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கும்;
கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தார், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டாரங்களைச்; சேர்ந்த விவசாயிகள்
உதவி செயற்பொறியாளர்;
வேளாண்மைப் பொறியியல் துறை,
27 H, எட்டையபுரம் ரோடு பிரதான சாலை,
கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி
அலுவலகத்தையும்,
தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள்
உதவி செயற்பொறியாளர்:
வேளாண்மைப் பொறியியல் துறை,
4/122 A1, ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு,
ஆறுமுகச்சாமி காலனி அருகில்,
தூத்துக்குடி அலுவலகத்தையும்,
திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள்
உதவி செயற்பொறியாளர்;
வேளாண்மைப் பொறியியல் துறை,
65/10C, முத்து மாலை அம்மன் கோவில் தெரு,
திருச்செந்தூர்
அலுவலகத்தையும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|