காயல்பட்டினம் அரசு பொது நூலகம் & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு ஆகியன இணைந்து, 10.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று, திரையிடல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன. இதுகுறித்த தகவலறிக்கை:-
காயல்பட்டினம் அரசு பொது நூலகம்& எழுத்து மேடை மையம் தமிழ் நாடு இணைந்து நடத்தும் திரையிடல் நிகழ்வு
அஸ்ஸலாமு அலைக்கும் ! அன்பார்ந்த காயல்வாசிகளே !
எதிர்வரும் 10 / 09 / 2017 ஞாயிறன்று காலை 10:00 மணிக்கு நமதூர் அரசு நூலகத்தில் இரண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன இன்ஷா அல்லாஹ் !
1. THE MAN WHO PLANTED TREES , (Animation, 30 நிமிடங்கள்)
பாழடைந்த ஊரை மரங்களை நட்டு தன்னந்தனியாக உயிர்ப்பித்த மனிதனின் அர்ப்பணிப்பு கதை .ஆங்கில துணைத்தலைப்புகளுடன் திரையிடவுள்ளோம்.
2. MODERN TIMES ( 1மணி நேரம் 27 நிமிடங்கள் )
“ பொருத்தமில்லாத பிடித்தமில்லாத இயந்திரத்தனமான வாழ்க்கை என் மீது திணிக்கப்பட்டுள்ளது. என் வாழ்வில் எந்த சுவையுமில்லை. ஒரே மாதிரியாக சலிப்பாக வாழ்க்கை போகின்றது ” என நம்மில் பலர் புலம்புகின்றோம்.
இப்படியான வாழ்க்கையை சாலி சாப்ளின் போன்ற ஒரு மக்கள் கலைஞன் தனது கலைப்பார்வையின் வழியாக எப்படி பார்த்துள்ளான் என்பதுதான் இப்படத்தின் சுவையான கரு.
சாலி சாப்ளின் படங்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியும் உலக மொழியில் அமைந்தவை. அவற்றின் காட்சிகள் உயிர்ப்பும் துடிப்பும் மிக்கவை..
இந்த திரையிடல் நிகழ்வில் அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்: அரசு பொது நூலகம்
புதிய பேருந்து வளாகம்
காயல்பட்டினம்
காலம் : 10 / 09 / 2017 ஞாயிறு
காலை 10:00 – 12:15 மணி வரை
குறிப்பு: நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கப்படும்..
இப்படிக்கு
எழுத்து மேடை மையம் தமிழ் நாடு
தொடர்பெண்: 9962841761
&
அரசு பொது நூலகம்
காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|