காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் குருதிக்கொடை முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க விருப்பமுள்ளோர், இணையவழியில் (ஆன்லைன் முறையில்) பெயர்பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அக்டோபர் 3, 2017 அன்று நடைபெறவுள்ள இரத்த தானம் முகாமில் (BLOOD DONATION CAMP) கலந்துக்கொள்ள இணையவழியில் பதிவு செய்யலாம்! (ONLINE REGISTRATION OPEN)
இறைவன் நாடினால், எதிர்வரும் அக்டோபர் 3 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில், இரத்த தான முகாம் - நடைபெறவுள்ளது.
இந்த முகாமை - நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்செந்தூர் தாலுகா அரசு மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த முகாமில் இரத்த தானம் செய்யவிரும்புவோர் எளிதாக முன்பதிவு செய்ய - இணையவழி முன்பதிவு படிவம் (ONLINE REGISTRATION) - வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தை நிரப்ப - ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும்.
எனவே - இரத்த தானம் செய்யவிரும்புவோர் - கீழே வழங்கப்பட்டுள்ள, இணையதள முகவரி மூலமாக, முன்பதிவு செய்ய (PRIOR REGISTRATION) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முன்பதிவு செய்ய இணையதள முகவரி:
https://goo.gl/forms/y6MUBJqN6HrKzLhM2
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 11, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 05.04.2017. புதன்கிழமையன்று, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஏற்பாட்டில், முதலாவது குருதிக்கொடை முகாம், காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், பல்வேறு இரத்த வகுப்புகளைக் கொண்ட - சுமார் 80க்கும் மேற்பட்ட காயலர்கள் குருதிக்கொடையளித்தனர். அவர்களனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கம் இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
100 முறைக்கும் மேலாக குருதிக்கொடையளித்த காயலரான கானி எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், இம்முகாமின் துவக்கத்தில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|