காயல்பட்டினம் அரசு மருத்துவமனை உள் நோயாளிகள் பிரிவில், 09.09.2017. அன்று காணக்கிடைத்த காட்சிதான் இது.
இம்மருத்துவமனை உட்பட – நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காயல்பட்டினம் நகராட்சியிடம் பொதுநல அமைப்புகள் பலமுறை கோரிக்கையளித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அரசு மருத்துவமனையில் – பழுதுகள் சரிசெய்யப்படாததால் கடந்த சில காலமாக செயல்படாமல் இருந்த ஆண்களுக்கான உள் நோயாளிகள் பிரிவு, தெரு நாய்களின் புகலிடமாகவே இருந்தது. அப்பகுதிக்கு யார் சென்றாலும் அவர்களைத் துரத்தி அச்சமூட்டும் பணியை அவை செய்யத் தவறியதில்லை. இதைக் கண்ணுற்ற காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர், தம் சொந்தச் செலவில் அந்த வார்டின் பழுதுகளைச் சரிசெய்து, பயன்பாட்டிற்கு வழிவகை செய்ததையடுத்து அங்கு தெருநாய்களின் தொல்லை நீங்கியுள்ளது.
என்றாலும், மருத்துவமனை வளாகத்தில் தேவையின்றிச் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த இன்றளவும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அங்கு வருகை தரும் நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையே நீடிக்கிறது. மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் இந்தத் தெருநாய்களின் தொல்லையால் அச்சத்துடனேயே பணி செய்து வருகின்றனர்.
படம்:
மவ்லவீ ஷெய்க் அலீ ஃபிர்தவ்ஸீ (S.K.)
|