காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் ஓ.எல்.ஃபாத்திமா பர்வீன் – தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்திற்காக, தமிழக அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவராக டாக்டர் OL பாத்திமா பர்வீன் நியமனம்! தமிழக அரசு, சுகாதாரத்துறை செயலர், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஆகியோருக்கு நன்றி!!
தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MEDICAL RECRUITMENT BOARD) - 1013 உதவி மருத்துவர்களை புதியதாக தேர்வு செய்துள்ளது.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அந்த 10 பேரில் - காயல்பட்டினம் மரைக்கார் பள்ளி தெருவை சார்ந்த சகோதரர் உவைஸுனா லெப்பை அவர்களின் மகள் டாக்டர் OL பாத்திமா பர்வீன் அவர்களும் ஒருவர்.
இவர் - கோமான் தெருவில் உள்ள காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவராக (MEDICAL OFFICER) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சகோதரி டாக்டர் பாத்திமா பர்வீன் அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நியமனம் செய்த தமிழக அரசுக்கும், சுகாதார துறையின் அரசு முதன்மை செயலர் திரு ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களுக்கும், இதற்கு பெரும் முயற்சி எடுத்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் B.Sc., B.Ed. அவர்களுக்கும், நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் - டாக்டர் பாத்திமா பர்வீன் அவர்களின் மருத்துவ சேவை மூலமாக பல்லாயிரங்கணக்கான மக்கள் பயன்கள் பெறவும் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 13,2017; 2:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
புதிய தலைமுறை தொலைக்காட்சி
2009 – 2010 கல்வியாண்டில் நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர், சிறப்புத் தேர்ச்சி (மெரிட்) அடிப்படையில், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் 2010ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று முடித்தமை குறிப்பிடத்தக்கது.
|