தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியரின் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில், வரும் அக்டோபர் 06ஆம் நாளன்று மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) டாக்டர் மு.வீரப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா;க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் 06.10.2017 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) டாக்டர்.மு.வீரப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ;ந்த 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 06.10.2017 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பு+ர்த்தி செய்து தலைமையாசிரியரின் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று போட்டிகள் நடைபெறும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குக் காலை 9 மணிக்கு வருகை தந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிடவேண்டும்;.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதற்பரிசாக ரூபாய் 10,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் முதற் பாpசுப் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டித் தொடர்பானத் தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.
மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் க.சிவசாமி போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை மேல்நிலைப் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|