தமிழ்நாடு அரசுப் பேருந்து – கும்பகோணம் மண்டலம் சார்பில் திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்திலும் காயல்பட்டினம் நிறுத்தம் (Stage) வரையறுக்கப்பட்டுள்ளதாக அதன் மண்டல அலுவலர் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து கடந்த சில மாதங்களாக, நடப்பது என்ன? குழுமம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகள் - காயல்பட்டினம் வழியில் செல்ல, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள், நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்து வருகின்றனர்.
பேருந்து விஷயத்தில் - மற்றொரு பிரச்சனையான, காயல்பட்டினம் STAGE க்கு பயண சீட்டு வழங்குவது குறித்தும், நடப்பது என்ன? குழுமம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இது சம்பந்தமாக - நடப்பது என்ன? நிர்வாகிகளுக்கு ஆவணம் ஒன்றை கடந்த வாரம் வழங்கிய திருநெல்வேலி கழக அதிகாரி ஒருவர், கும்பக்கோணம் கழகம் பேருந்துகள் அனைத்திலும் காயல்பட்டினம் STAGE உள்ளது என தெரிவித்தார். காயல்பட்டினம் நிறுத்தம் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அம்மண்டலத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணம்:-
பிற (மதுரை, கோவை, திருநெல்வேலி) பேருந்துகளில் கழக - காயல்பட்டினம் STAGE குறித்த தகவல்களை நடப்பது என்ன? குழுமம் சேகரித்து வருகிறது. இறைவன் நாடினால், விரைவில் அவ்விவரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 15, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|