காயல்பட்டினம் பப்பரப்பள்ளி குப்பைக் கிடங்கு பகுதியில் நேற்று திடீரென துர்வாடை வீசியதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்தனர். மழைக்காலத்திற்கு முன் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்தத் துர்வாடை வீசியதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் காயல்பட்டினம் நகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடந்த இரண்டு - மூன்று தினங்களாக, எல்.எப்.சாலை உட்பட நகரின் வட மேற்கு பகுதிகளில் - கடுமையான துர்வாடை உணரமுடிந்தது. இந்த துர்வாடை குறித்து - நடப்பது என்ன? குழுமங்களில் - குறிப்பாக பெண்கள் குழுமங்களில் - அச்சம் தெரிவிக்கப்பட்டது.
நடப்பது என்ன? குழுமம் - இது சம்பந்தமாக, தொடர்புடைய நகராட்சி அதிகாரிகளிடம் வினவியது.
இது குறித்து விளக்கம் வழங்கிய அதிகாரிகள், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கில் JCB கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அப்பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால் தான் இந்த துர்வாடை வீசியது என்றும் தெரிவித்துள்ளார்கள். இனி இந்த வாடை வீசாது என்றும் அதிகாரிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 17, 2017; 6:15 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|