காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை இலவச முகாமில் 84 பேர் பயன்பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கண் மருத்துவ பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்கள் 10.09.2017. ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
பள்ளி செயலாளர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையேற்க, புன்னகை மன்றம் வாட்ஸ்அப் குழும நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஜார் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் அனைவரையும் வரவேற்றார். எல்.டீ.ஸித்தீக் முகாமைத் துவக்கி வைத்தார்.
இம்முகாமில், 84 பயனாளிகளுக்கு சர்க்கரை நோய் பரிசோதனையும், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டன.
ஏற்பாடுகளை, அல்அமீன் பள்ளி முதல்வர் எம்.ஏ.புகாரீ தலைமையில், ஏ.ஜான் சிரோன்மணி, , அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் அலுவலர் விவேக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
|