ஐக்கிய அரபு அமீரகம் – துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.அஹ்மத் நிஜாம் உடைய தந்தை – காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த – பாட்மின்டன் விளையாட்டு வீரர் எஸ்.ஐ.அஹ்மத் மீரான், 11.09.2017. திங்கட்கிழமையன்று காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது துபை காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஏ.எம்.அஹ்மத் நிஜாம் அவர்களின் தந்தை - ஜனாப் எஸ்.ஐ.அஹ்மத் மீரான், அவர்கள் 11/09/2017 திங்கட்ழமை பிற்பகல் 12.10 மணியளவில் இறைக் கட்டளைப்படி காலமானார் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹும் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது துபாய் காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
இம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர் – துபை கா.ந.மன்றம்)
|