காயல்பட்டினம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது என்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் – இணையதளம் வழியாக கருத்துக்களைக் கோரியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நம் ஊர் பெயருக்கான சரியான எழுத்தாக்கம் எது?
‘நடப்பது என்ன?” குழுமத்தின் இணையவழி கருத்துக்கேட்பு!
நமதூரின் பெயர் - வெவ்வேறு இடங்களில், பலவிதமாக எழுதப்படுவதை - நம்மில் பலர் பார்த்திருப்போம்.
தமிழில் காணக் கிடைக்கும் எழுத்தாக்கம்:
காயல்பட்டினம்
காயல்பட்டணம்
ஆங்கிலத்தில் காணக்கிடைக்கும் எழுத்தாக்கம்:
Kayalpattinam
Kayalpatnam
Kayalpattanam
இவற்றுள் எது சரியானது?
நம் ஊர் பெயருக்கு என ஒரு தமிழ் எழுத்தாக்கமும், ஓர் ஆங்கில எழுத்தாக்கமும் முடிவு செய்யப்பட வேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாக கேட்கத் துவங்கியுள்ளது.
நம் ஊர் பெயருக்கு சரியான எழுத்தாக்கம்தான் எது?
உங்கள் தேர்வை பதிவு செய்ய - கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்
http://poll.fm/5umg8
இது துவக்கமே!
இறைவன் நாடினால், ஊரின் அனைத்து ஜமாஅத்துகள், ஊர் நல கமிட்டிகள், பொது நல அமைப்புகள் ஆகியவற்றை கூட்டி - இது சம்பந்தமான ஒரு முடிவை எடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து அரசு துறைகளுக்கும் தெரிவிக்க நடப்பது என்ன? குழுமம் முயற்சிசெய்யும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: செப்டம்பர் 10, 2017; 8:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|