காயல்பட்டினத்தில் 02.09.2017. சனிக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
இங்குள்ள சுமார் 30 பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை - காலை 07.30 மணிக்குத் துவங்கி, 10.30 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடைபெற்றது. இத்தொழுகையில், அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்றதும் ஒன்றுகூடிய அவர்கள், தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பெருநாள் தொழுகைக்குப் பின், பள்ளி பராமரிப்பிற்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. ஜமாஅத்தினர் தாராளமாக நன்கொடைகளை வழங்கினர்.
மாலையில், கடற்கரையில் ஆண்களும், பெண்களும் அதிகளவில் கூடி, பொழுது போக்கினர்.
சிறிய குத்பா பள்ளியில் அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார்.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் காயலர்கள்:-
ஸெய்யிதினா பிலால் பள்ளியில், தொழுகை நிறைவுற்ற பின், அப்பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீயுடன் ஜமாஅத்தினர்:-
முன்னதாக, பெருநாளுக்கு முந்திய இரவில் பல பள்ளிவாசல்களில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. குருவித்துறைப் பள்ளியில் நடைபெற்ற திக்ர் மஜ்லிஸ் காட்சிகள்:-
சிறிய குத்பா பள்ளி மஹல்லா ஜமாஅத்தினர் சார்பில், அதன் அருகிலுள்ள மன்பஉல் பரக்காத் சங்க வளாகத்தில் நடைபெற்ற திக்ர் மஜ்லிஸ் காட்சிகள்:-
படங்களுள் உதவி:
K.M.T.சுலைமான் (சிறிய குத்பா பள்ளி & மன்பஉல் பரக்காத் சங்கம்)
‘துணி’ M.A.அன்ஸாரீ (மகுதூம் ஜும்ஆ பள்ளி)
[கூடுதல் தகவல்கள் & படங்கள் இணைக்கப்பட்டன @ 14:50 / 06.09.2017.] |