காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், நிகழாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு தாயகம் வந்துள்ள முன்னாள் மாணவர்களுடன் – பள்ளி நலன் குறித்து கருத்துக்களைப் பரிமாறுவதற்காக – சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சி, 04.09.2017. திங்கட்கிழமையன்று 10.00 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்பின் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்னிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இறையருளால், இம்மடல் தங்கள் யாவரையும் நற்சுகத்துடனும், தூய சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக... ஆமீன்.
1979-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நமது முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி கடந்த 37 ஆண்டுகளாக நமதூர் மக்களின் பேராதரவுடன் உலகக் கல்வியை சிறப்பான முறையில் மாணவர்களுக்கு வழங்கிவருவது நாம் யாவரும் அறிந்ததே.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் இப்புனித தியாக திருநாளை முன்னிட்டு, தாயகம் வந்துள்ளதால், பள்ளி நிர்வாகம் வரும் 04-09-2017 திங்கட் கிழமை காலை இந்திய நேரப்படி 10:00 மணியளவில், பள்ளி அரங்கில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
தாயகம் வந்துள்ள எமது பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் சிரமம் பாராது, விடுபடாமல் இந்நிகழ்வில் கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
வல்ல அல்லாஹ் நம் யாவரின் உளத்தூய்மையான நற்கருமங்களை ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாகத் தந்தருள்வானாக, ஆமீன்.
இவண்,
நிர்வாகிகள்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேல்னிலைப்பள்ளி – காயல்பட்டணம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.R.ஷேக் முஹம்மத்
(மக்கள் தொடர்பு அலுவலர், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
|