தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலரை சென்னையில் சந்தித்ததாகவும், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளைக் கோரியுள்ளதாகவும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிடைக்கப்பெற்றுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கியப் பேரவையின் சார்பில் 31-08-2017 வியாழக்கிழமை இன்று காலை சென்னையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
காயல்பட்டினம் அரசுப் பொது மருத்துவமனையின் அடிப்படைத் தேவை மற்றும் மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை குறித்த முழுமையான கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. முதன்மைச் செயலர் நமது குழுவினரை மிகுந்த அன்புடன் வரவேற்று ,நமது கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்தார். இது குறித்து நிச்சயம் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் , இன்னும் இரண்டு வாரத்திற்குள் நமதூர் பொது மருத்துவமனைக்கு நேரடியாக வருகைத் தந்து ஆய்வு செய்வதாகவும் உறுதி அளித்தார் நமதூரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அபூபக்கர் அவர்களும் ,பேரவையின் துனைச் செயலர் அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அவர்களும் பங்கேற்ற இச்சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி நிறைந்ததாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. மருத்துவமனை சம்பந்தமான நமது கோரிக்கைகள் செயல்வடிவம் பெற பேரவை தொடர்ந்து கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .
குறிப்பு: மாண்புமிகு முதலமைச்சருடனான பேரவையினரின் சந்திப்பு நிகழ்வு குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|