ஹிஜ்ரீ கமிட்டி – காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டு, குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இன்று காயல்பட்டித்தில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை.
மௌலவி முஹம்மது மீரான் தாவூதி அவர்கள் பெருநாள் உரையாற்றினார்.
==========
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பிறைகளை நாட்காட்டியாக அல்லாஹ் படைத்துள்ளான் (2:189). சூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின்படியே அமைந்துள்ளன (55:5). சந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக் கணக்கிடலாம் (10:5).
இத்தகைய குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவ்வருடத்தின் அரஃபாநாள் புதன்கிழமை (30-08-2017), ஹஜ்ஜூப் பெருநாள் வியாழக்கிழமை (31-08-2017) என்பதுதான் சரியானதாகும்.
வல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் பெருநாள் தினமான வியாழக்கிழமை (31-08-2017) இன்று இறைவனைப் புகழ்ந்து, ஏழைகளுக்கு உணவளித்து தியாகத் திருநாள் என்னும் ஹஜ்ஜூப் பெருநாளை ஹிஜ்ரி கமிட்டியினர் அனைவரும் சேர்ந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் சரியான தினத்தில் சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் இன்று காலை 7:40 மணியளவில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அல்ஹாஃபிழ் முஃபீஸூர் ரஹ்மான் அவர்கள் தொழுகையை வழி நடத்தினார். மௌலவி முஹம்மது மீரான் தாவூதி அவர் பெருநாள் குத்பா உரையாற்றினார். நூற்றுக்கும் அதிகமானோர் தொழுகையில் பங்கேற்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜ்ரீ கமிட்டி சார்பாக...
M.N.அஹ்மத் ஸாஹிப்
|