காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் துணைத் தலைவர் எம்.எஸ்.சதக் மீரானின் தந்தை, காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த முஹம்மத் ஸுல்தான், இன்று 14.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் ஐ.எல்.எஸ்.மீரா லெப்பை அவர்களின் மகனும்,
மர்ஹூம் வி.எஸ்.சதக்கு தம்பி அவர்களின் மருமகனாரும்,
செய்யித் ஆயிஷா உம்மா என்பவரின் கணவரும்,
எம்.எஸ்.ரஃபீக்கா, காயல்பட்டினம் ஐக்கியப் பேவை – ஹாங்காங் (KUFHK) அமைப்பின் துணைத் தலைவர் எம்.எஸ்.சதக் மீரான், ஹாங்காங் – காயல் மாணவர் நலச் சங்கம் (KSWA) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல், எம.எஸ்.ஆமினா ஆகியோரின் தந்தையும்,
‘கிரஸண்ட் மெடிக்கல்ஸ்’ எம்.ஏ.அன்ஸாரீ, எம்.ஏ.உமர் அப்துல் லத்தீஃப் ஆகியோரின் மாமனாரும்,
எஸ்.டி.முஹம்மத் ஃபாரூக், எஸ்.டி.அபூபக்கர் ஆகியோரது சகோதரியின் கணவரும்,
ஏ.முஹம்மத் அப்துல் காதிர் அஃப்ஃபான், எஸ்.எம்.அஹ்மத் சுல்தான் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (30.08.2017. புதன்கிழமை) 17.00 மணிக்கு, காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் – மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல் & படம்:
சஊதி அரபிய்யா – புனித மக்காவிலிருந்து...
சீனாஷ்
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 20:51 / 29.08.2017.]
|