SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் – தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, உயிரிழந்த மீராத்தம்பியின் குடும்பத்தினரை, அவரது தலைமையில் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
|