சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், “இந்தியாவை அடித்துக் கொல்லாதே! வலியுடன் இரத்தம் வழியும் இந்தியா!!” எனும் தலைப்பில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பேரணி, பொதுக்கூட்டம், தூத்துக்குடியில் 19.08.2017. சனிக்கிழமையன்று 17.00 மணிக்கு நடைபெற்றது.
தூத்துக்குடி 4ஆம் கேட் அருகில் துவங்கி, வி.வி.டி. சிக்னல் வழியாக, பொதுக்கூட்ட மைதானத்தில் பேரணி நிறைவுற்றது. 18.00 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஃபாஸில் சமீர், SDPI துணைத்தலைவர் முஹம்மத் அலீ, பொருளாளர் மைதீன் கனி, செயற்குழு உறுப்பினர் முஹம்மத் சித்தீக், பால் பிரபாகரன், சுஜித் உள்ளிட்டோர் பேசினர்.
மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் நன்றி கூறினார். பேரணி, பொதுக்கூட்டத்தில் SDPI கட்சியின் மாவட்ட - கிளை நிர்வாகிகள், அங்கத்தினர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
கல்வத் அஹமது கபீர்,
செய்தி மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர்,
#SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
|