இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் 15.08.2017. அன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி சார்பில், அன்று 08.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி செயலாளர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ விழாவிற்குத் தலைமையேற்று, தேசிய கொடியேற்ற, அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் பணி நிறைவுபெற்ற மேற்பார்வையாளர் பீ.சங்கரேஷ்வரி அனைவரையும் வரவேற்றார்.
இலக்கிய மன்றச் செயலாளர் ஜி.மணிமேகலை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மாணவ-மாணவியரின் கூட்டு உடற்பயிற்சி, யோகா, பேச்சு, பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியின் அரபி ஆசிரியை கே.எம்.செய்யித் ராபியா ரோஷன், புன்னகை மன்றம் வாட்ஸ்அப் குழுமத்தின் நிர்வாகிகளான ஏ.எல்.முஹம்மத் நிஜார், ஏ.ஆர்.ரிஃபாய் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
பள்ளி தாளாளரும், முதல்வருமான எம்.ஏ.புகாரீ தேசிய ஒற்றுமையை வலியுறுத்திப் பாடல் பாடினார். ஆசிரியை கோகிலா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியை பி.ஏ.ஃபாத்திமா ஆஃப்ரின் ஒருங்கிணைப்பில் ஆசிரியையர், அலுவலர்கள் செய்திருந்தனர்.
தகவல்:
B.A.ஃபாத்திமா ஆஃப்ரின்
(தலைமையாசிரியை, அல்அமீன் பள்ளி)
|