காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் முதன்மைச் சாலையில் ஹாங்காங் கார்மெண்ட்ஸ் & டெய்லரிங் என்ற பெயரில் தையலகம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து, பேரவை அங்கத்தினருக்கும் – அவர்களது குடும்பத்தினருக்கும் விளக்குவதற்காக, சிறப்புக் கூட்டம் 12.08.2017. சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 13.00 மணி வரை, தையலக வளாகத்தில் நடைபெற்றது.
கிராஅத்தைத் தொடர்ந்து, பேரவை தலைவர் – ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
தையலக செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குநராகப் பணியாற்றிய எம்.எல்.ஷேக்னா லெப்பை, பொறுப்பாளர் ஃபாரிஸா, பேரவை முன்னாள் தலைவர் ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
நிறைவில், தையலகத்தில் புதிதாகத் தைக்கப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மகளிருக்கான ஆடைகளை, பங்கேற்றோர் பார்த்து மகிழ்ந்ததோடு, அதைச் செய்தவர்களைப் பாராட்டினர்.
அங்கு நடைபெறும் தையல் பயிற்சி வகுப்பில் கற்று, தனது சிறு பருவத்திலேயே அழகிய முறையில் ஆடை தைத்த சிறுமியை ஊக்கப்படுத்தும் வகையில், பேரவை நிர்வாகிகள் & அங்கத்தினரால் இதன்போது பணப்பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை – ஹாங்காங் அமைப்பின் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், பேரவையின் நிர்வாகிகள், அங்கத்தினர், ஹாங்காங் வசிப்பை நிறுத்திவிட்டு ஊரிலிருப்போர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் குளிர்பானம், தேனீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது.
|