காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 14 காயலர்கள் உட்பட மொத்தம் 15 பேர் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டங்களைப் பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா 14.08.2017. திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
‘கலீஃபத்துல் குலஃபா’ மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எம்.அப்துல் காதிர் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.முஹ்யித்தீன் தம்பி கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள் அரபி பைத் பாடினர்.
ஜாவியா அரபிக் கல்லூரயின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஸனது – பட்டச் சான்றிதழை வழங்கி, வாழ்த்துரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, அவையோரும் ஸனதுகளை வழங்கினர்.
கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை நிறுவனர் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ ஆகியோர் பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.
சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் அலீ பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழா பேருரையாற்றினார்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் “காயல்பட்டினம் மத்ரஸாக்கள் ஊக்குவிப்புத் திட்ட”த்தின் கீழ், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் அவற்றை மாணவர்களிடம் வழங்கினார்.
மத்ரஸா பாட வேளைகளில் சிறந்த வருகை, ஒழுக்கம், தொழுகையில் பேணிக்கை, விடுமுறை நாட்களிலும் சிறப்புப் பாட வகுப்புகளில் தவறாத தேர்ச்சி, தேர்வுகளில் சிறப்பிடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகளும், பொருட்பரிசுகளும் வழங்கப்பட்டன. மஹ்ழரா அரபிக் கல்லூரியின் செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ, நகரப் பிரமுகர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், எம்.ஏ.எம்.சதக்கத்துல்லாஹ், எம்.எஸ்.எம்.மரைக்கார், வட்டம் ஹஸன் மரைக்கார், ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், எம்.ஏ.அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப் உள்ளிட்டோர் அப்பரிசுகளை வழங்கினர்.
பட்டம் பெற்ற மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்ட நன்றியுரையைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அப்துல் வதூத் அனைவருக்கும் நன்றி கூற, கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபாஸீயின் துஆவைத் தொடர்ந்து, ஜலாலாவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளனைத்தையும், மவ்லவீ ஹாஃபிழ் அபுல்ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ நெறிப்படுத்தினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழா & கல்வி நாள் நிகழ்ச்சி நிரலும், பட்டம் பெற்ற மாணவர்கள் விபரப் பட்டியலும் வருமாறு:-
விழா நிறைவுற்றதும், பட்டம் பெற்ற மாணவர்கள், கல்லூரி ஆசிரியருடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.S.முஹம்மத் ஸாலிஹ் &
மவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ
கள உதவி:
ஹாஃபிழ் அப்துல் காதிர் அல்புகாரீ
பட்டமளிப்பு விழாவின் தொடர்ச்சியாக, பட்டம் பெற்ற மாணவர்களை பைத் பாடி, நகர்வலமாக அழைத்துச் சென்று அவர்களது இல்லங்களில் சேர்க்கும் நிகழ்ச்சி, 15.08.2017. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 19.30 மணி வரை நடைபெற்றது.
|