Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:18:38 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19547
#KOTW19547
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017
ரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1948 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் 61ஆவது செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 61-வது செயற்குழு கூட்டம் கடந்த 11.08.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் ரியாத்-மலஸ்சில் அமைந்துள்ள எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் சகோதரர் இப்ராஹீம் இர்ஷாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.





ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் S.B. முஹைதீன் வாசித்த பின் சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் சகோதரர் M.E.L. நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.

மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:

ஷிபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் என 20 விண்ணப்பங்களை வாசித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாதாந்திர உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள், மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ரமலான் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்:

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு (2017) ரமலான் மாதத்தில் எமது மன்றத்தின் சார்பில் 226 குடும்பங்களுக்கு ரமலான் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இந்த அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு உரித்த நாட்டுக் கோழி வழங்கப்பட்டது.

இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்ட ரியாத் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மது, மற்றும் இத்திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர் இஸ்மத் மற்றும் சகோதரர் சூஃபி ஆகியோருக்கும், இந்த ரமலான் உணவுப் பொருட்கள் வழங்கிட பொருளுதவி செய்த ரியாத் காயல் நல மன்றத்தின் அங்கத்தினர்கள், அபிமானிகள் மற்றும் இதற்கான முயற்சிகளில்; பணிகளில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் ரியாத் காயல் நல மன்ற நிர்வாகம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து மகிழ்கிறது.

திருமண வாழ்த்து:

நடைபெற்று முடிந்த எம்மன்ற துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது மற்றும் பொதுக்குழு உறுப்பினர் செய்யத் முஹம்மத் புஹாரி ஆகியோரின் இல்ல திருமண வைபவத்திற்கும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 தேதி அன்று நடைபெறவுள்ள துபாய் காயல் நல மன்றத்தின் துணை தலைவர் சகோதரர் சாளை ஷேக் சலீம் அவர்களது இல்ல திருமண வைபவத்திற்கும் எம்மன்றம் சார்பாக வாழ்த்து தெரிவித்ததுடன் மணமக்களின் இல்லற வாழ்வு சிறக்க பிராத்தனை செய்யப்பட்டது.

பார்வையாளர்கள் கருத்து:

இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஆஷிக் ரஹ்மான், சகோதரர் சித்தீக் மற்றும் சகோதரர் சாகுல் ஹமீத் ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.

குறிப்பாக, சமீபத்தில் ரியாத் நகரில் பணியில் சேர்ந்த சகோதரர் சாகுல் ஹமீத் அவர்கள் கூறுகையில் ரியாத் காயல் நலமன்றம் (RKWA)-வின் சீரிய செயல் பாடுகள் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மையுடைய உறப்பினர்களை கொண்ட இம்மன்றத்தின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாககும், நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வரும்காலங்களில் தம்மால் இயன்ற பங்களிப்பினை செய்வதாகவும் உறுதி அளித்தார். இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவனாக என்ற பிரார்த்தனையோடு அமர்ந்தார்.

சகோதரர் M.E.L. நுஸ்கி, சகோதரர் கூஸ் அபூபக்கர், சகோதரர் இர்ஷாத் மற்றும் சகோதரர் நயீமுல்லாஹ் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.

இறுதியாக சகோதரர் K.S.M. அப்துல் காதர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாக்கம்:
தைக்கா சாஹிப்


தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஹஸன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved