காயல்பட்டினம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் செல்வதை ஆய்வுசெய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு – மோட்டார் வாகன ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை அரசு பேருந்துகள் புறக்கணிப்புது சம்பந்தமாக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் - பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் ஒரு முகமாக - திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் (REGIONAL TRANSPORT OFFICER; RTO), காயல்பட்டினம் வழி உரிமம் பெற்றுள்ள அனைத்து அரசு பேருந்துகளும் - காயல்பட்டினம் வழி செல்வதை உறுதி செய்யக்கோரியும், அவ்வாறு செல்லாமல் புறக்கணிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் வழங்கியுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், "காயல்பட்டினம் வழியாக செல்ல அனுமதி பெற்றுள்ள அரசு பேருந்துகள் தொடர்ந்து அவ்வழியாக இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோரி மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை - 1, திருச்செந்தூர் - கேட்டுக்கொள்ளப்படுகிறார்" என தெரிவித்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 12, 2017; 4:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|