காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்டப் பணிகள் செய்திட, அண்மையில் ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டது. அவை குறித்த விபரங்கள் குறித்து – ஆவணங்களுடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் சமீபத்தில் விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்! முழு ஆவணங்கள்!!
காயல்பட்டினம் நகராட்சியில் சமீபத்தில் சில ஒப்பந்தப்புள்ளிகள் விடப்பட்டுள்ளன. அந்த பணிகள் குறித்து விபரம், ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
(1) ஏற்கனவே உள்ள குடிநீர் சுத்தீகரிப்பு கருவியை (CHLORINATOR) புனரமைக்கும் பணி
பணி மதிப்பீடு: ரூபாய் 4,00,000
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஜூன் 20, 2017
(2) பொன்னங்குறிச்சியில் புதிய குடிநீர் சுத்தீகரிப்பு கருவி (CHLORINATOR) நிறுவுதல்
பணி மதிப்பீடு: ரூபாய் 9,90,000
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஜூன் 20, 2017
(3) காயல்பட்டினம் நகராட்சியின் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கான பணியாளர்கள் (ஐந்து நபர்கள் + ஒரு ஓட்டுநர்)
பணி மதிப்பீடு: ரூபாய் 6,70,000
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஜூலை 11, 2017
(4) கடையக்குடி தார் சாலை
பணி மதிப்பீடு: ரூபாய் 9,40,000
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(5) கே.எம்.டி. மருத்துவமனை அருகில் பாலம்
பணி மதிப்பீடு: ரூபாய் 8,00,000
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(6) கொச்சியார் தெரு பேவர் பிளாக் சாலை (புனரமைப்பு)
பணி மதிப்பீடு: ரூபாய் 8,50,௦௦௦
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(7) நகராட்சி வளாகம் துப்பரவு பணி ஷெட்
பணி மதிப்பீடு: ரூபாய் 1,75,௦௦௦
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(8) பெரிய நெசவு தெரு பேவர் பிளாக் (புனரமைப்பு)
பணி மதிப்பீடு: ரூபாய் 7,00,௦௦௦
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(9) காயிதே மில்லத் நகர் - பூந்தோட்டம் பாலம்
பணி மதிப்பீடு: ரூபாய் 4,00,௦௦௦
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
(10) வால்வு தொட்டிகளை சரி செய்தல்
பணி மதிப்பீடு: ரூபாய் 9,70,௦௦௦
ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்ட நாள்: ஆகஸ்ட் 3, 2017
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஆகஸ்ட் 9, 2017; 4:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |