காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெறுகிறது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட மொத்தம் 15 மாணவர்கள் ‘ஆலிம் ஃபாஸீ’, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது – பட்டச் சான்றிதழும் பெறுகின்றனர்.
காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், 7 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ‘மவ்லவீ ஆலிம்’ பாடப்பிரிவு, திருமறை குர்ஆனை மனனம் செய்யப் பயிற்றுவிக்கும் ‘ஹிஃப்ழு’ப் பிரிவு, பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி - ஒழுக்கத்தைப் பயிற்றுவிப்பதற்காக ‘மக்தபத்துர் ராஸிய்யா’ என்ற பெயரில் தீனிய்யாத் பிரிவு ஆகியன இயங்கி வருகின்றன.
இந்த அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா, இன்று காலை 10.00 மணிக்குத் துவங்கி நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற – காயல்பட்டினத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ‘மவ்லவீ ஆலிம் ஃபாஸீ ஸனது – பட்டச் சான்றிதழ் பெறவுள்ளனர்.
அதுபோல, திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்த – காயல்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேர் உட்பட மொத்தம் 13 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது - பட்டச் சான்றிதழ் பெறுகின்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் (Facebook & YouTube) ஒளி (வீடியோ) நேரலை செய்யப்பட்டு வருகிறது. கீழ்க்காணும் இணைப்புகளில் சொடுக்கி, நேரலையைக் காணலாம்!
முகநூல் நேரலை:
YOUTUBE நேரலை:
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் காதிர் அல்புகாரீ |