இந்தியாவின் 71ஆவது சுதந்திர நாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி வளாகத்தில், இன்று 08.00 மணிக்கு சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் முன்னாள் தாளாளர் வாவு எஸ்.சுலைமான் அவர்களின் மகள் வாவு ஆஸியா கதீஜா தலைமையேற்று, தேசிய கொடியேற்றினார்.
தாளாளர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் மகள் வாவு ஷேக் ஃபாத்திமா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை க. பீர் ஃபாத்திமா பீவி அனைவரையும் வரவேற்றார்.
சுதந்திர நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் வரலாற்று ஆசிரியை தஸ்னீமா நஸ் ரீன் ரஹ்மான் – இந்திய விடுதலைப் போர் குறித்தும், விடுதலை பெற்ற இந்தியாவின் இன்றைய நிலை குறித்தும் உரையாற்றினார்.
தையலாசிரியை பாதுஷா ரிஹானா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவியர், பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
|