ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் சார்பில், 21.07.2017. அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், இவ்வாண்டும் ஒருங்கிணைந்த முறையில் உள்ஹிய்யாவை நிறைவேற்றிட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.3,500/- என தொகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பங்கு சேர விரும்புவோரும், தனியாக ஆடு அல்லது மாட்டை உள்ஹிய்யா கொடுக்க விரும்புவோரும்
ஏ.ஏ.ஹஸனா லெப்பை,
‘ஜப்பான்’ சுலைமான்
ஆகிய பொறுப்பாளர்களுள் ஒருவரைத் தொடர்புகொள்ளுமாறும், மேலதிக விரபங்களுக்கு +91 98438 28358, +91 90428 69396 ஆகிய எண்களுள் ஒன்றைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் & படம்:
‘தேக்’ முஜீப்
|