காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த தீபி என்பவர், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57.
சென்னை தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய அவரது உயிர், இன்று அதிகாலையில் உறங்கிய நிலையில் பிரிந்துள்ளது.
இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை – மண்ணடியிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).
أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم
وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...
"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.
1989/90 களில் தீபி காக்கா அவர்களுடன் LKS கோல்டு ஹவுஸில் பணிபுரிந்திருக்கிறேன். பழகுவதற்கு இனிமையானவரும், மென்மையானவரும். கோபமே வராத ஒரு குணக்குன்று. 1998 ல் புனித ஹஜ் பயணத்தின் போதும் அவர்களின் தந்தையாருடன் சந்தித்தேன். மிக்க நல்ல மனுஷர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.
மர்ஹூம் அவர்களை இழந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
எனது பக்கத்துக்கு வீட்டு கண்ணியத்துக்குரிய காக்கா. தீபி ஹாஜியார், மறைவு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. வல்ல அல்லாஹ் அவரகள் பாவங்களை பொருத்து ஜன்னத்துல் பிருதோஸ் என்னும் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாகவும் ஆமீன். எனக்கு, சிறிய வயதில் நிறைய அறிவுரைகள் சொன்னது, இன்றும் என் மதில் பதிந்து உள்ளது.
மர்ஹூம். அவர்ஹளின் தங்கை, தம்பி, மனைவி, பிள்ளைகள், நண்பரகள், உறவினரிகளுக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்து அருள்வானாக ஆமீன், ஆமீன், யா ரப்பால் ஆலமீன்!
மிக்க துரயமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross