காயல்பட்டினம் நகராட்சியின் வேண்டுகோளையடுத்து – மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் உட்பட நகரின் அனைத்துக் கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு – தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகளை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. சில கடைகளில், “ப்ளாஸ்டிக் கேரி பைகள் இங்கு வழங்கப்பட மாட்டாது!” என அறிவிப்புப் பலகையும் கடை முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வருகையில், கைவசம் துணிப் பைகளைக் கொண்டு வரும் காட்சியை நகரில் பரவலாகக் காண முடிகிறது.
எனினும், “நகர்நலன் கருதி நகராட்சியுடன் ஒத்துழைக்க நாங்கள் ஆயத்தமாகவே உள்ளோம்... எங்களைத் தடுப்பதை விட, ப்ளாஸ்டிக் பைகள் உற்பத்தியைத் தடுப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்” என பல கடைக்காரர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
|