அமுதகவியரசு உமறுப்புலவர் விழா, தமிழக அரசு சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அறிவித்துள்ளார். இதுகுறித்த அரசின் செய்தியறிக்கை:-
அமுதகவியரசு உமறுப்புலவர் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம்; எட்டயபுரத்தில் 1642 ஆம் ஆண்டு ஹிஜிரி, 1052 இல் ரப்பியுலவ்வல் மாதம் பிறை 14-ல் பிறந்தாh.; சிறு வயதிலேயே இலக்கண, இலக்கிய, கவிநிகண்டு பயின்று முதன்நிலை மாணவராக விளங்கினார். அன்னாரது இறையருட் கவிபாடும் திறன்கண்ட எட்டயபுரம் மன்னர் இவரை அரசவை புலவராக நியமித்தார். பின்னர் உலகப்புகழ்பெற்ற செயற்கரிய சீறாப்புராணம் காவியத்தை இந்த உலகிற்கு தந்தார். அமுதகவியரசு உமறுப்புலவர் அவர்கள் கி.பி.1703-இல் எட்டயபுரத்தில் இறந்து நல்லடக்கமானார்.
மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டதோடு தமிழுக்கு தொண்டாற்றியவர்களின் புகழை உலகறியச்செய்தார்கள். சுதந்திரப்போராட்ட வீரர்கள், வீரத்திருமகன்கள், இசைமேதைகள் மற்றும் தமிழுக்கு தொண்டாற்றியவர்களுக்கு மணிமண்டபங்கள், நினைவு இல்லங்கள் அமைத்து அவர்களுக்கு அரசு விழா எடுத்து அவர்களின் சுதந்திரப்போராட்ட உணர்வுகள், அர்பணிப்பு, தமிழ்தொண்டு மற்றும் அவர்களின் தியாகங்களை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து கொள்ளச்செய்தார்கள்.
தமிழுக்கு தொண்டாற்றி சீறாப்புராணம் இயற்றிய அமுதகவியரசு உமறுப்புலவர் அவர்கள் நினைவை போற்றும் விதத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எட்டயபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. எட்டயபுரம் ஊர்ப்பொதுமக்கள் பல ஆண்டு காலமாக அன்னாரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஊர்ப்பொதுமக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்களால் அமுதகவியரசு உமறுப்புலவர் அவர்களின் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக இனி வரும் காலங்களில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனையொட்டி இன்று (16.072017) எட்டயபுரம் அமுதகவியரசு உமறுப்புலவர் மணிமண்டபத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்களுக்கு எட்டயபுரம் ஊர்பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி நன்றி தொpவிக்கப்பட்டது. பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் அன்னாரது நினைவு சமாதியில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் திரு.சி.த.செல்லப்பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.கு.உமாமகேஷ்வரி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சுந்தரர்ராஜ் உட்பட பலர் இருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|