காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவின் ஹிஜ்ரீ 1438 புதிய கல்வியாண்டின் துவக்க வகுப்பு, 15.07.217. சனிக்கிழமையன்று 19.00 மணியளவில், மத்ரஸா வளாகத்தில் நடைபெற்றது.
துவக்கமாக கத்முல் குர்ஆன் & ஈஸால் தவாப் நிகழ்ச்சி, ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற அரங்க நிகழ்ச்சிக்கு, மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். வட்டாரப் பிரமுகர்களான எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், ஒய்.எஸ்.ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஹாஃபிழ் எஸ்.எச்.அலீ ஃபஹத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, மத்ரஸா ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ – மத்ரஸாவில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு முதல் பாடத்தைத் துவக்கிக் கொடுத்தார்.
மத்ரஸா குறித்த அறிமுகவுரையை – அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வழங்கினார். மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வாழ்த்துரையாற்றினார்.
மத்ரஸாவின் முன்னாள் மாணவர் சொளுக்கு எஸ்.எம்.ஐ.ஷாஹுல் ஹமீத் அன்பளிப்பிலான ஒலிபெருக்கியை, அவர் சார்பாக அவரது சகோதரர் சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யித் முஹம்மத் ஸாஹிப், முதல்வரிடம் வழங்கினார்.
கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளனைத்தையும் ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் நெறிப்படுத்தினார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் மத்ரஸாவின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஹாஃபிழ் M.I.K.செய்யித் அபூதாஹிர் |