சென்னையிலுள்ள ‘காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு அமைப்பு – KCGC’ சார்பில், காயல்பட்டினத்திலுள்ள 8 பொதுநல அமைப்புகளுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் – ஜகாத், ஸதக்கா வகைகளிலிருந்து நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
2017 மே மாதம் 4 ஆம் தேதி சென்னை, கிரீம்ஸ் சாலை , எஸ்.கே.பில்டிங்கில் வைத்து நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி , இதுநாள் வரை கே.சி.ஜி.சி உறுப்பினர்கள் தங்களது ஜகாத் மற்றும் ஸதகா தொகையினை காயல்பட்டினத்தை சார்ந்த 8 சமுதாய அமைப்புகளுக்கு தனித்தனியாக வருடந்தோறும் வழங்கி வந்தார்கள். இவ்வருடம் இத்தொகையினை ஒருங்கிணைத்து கே.சி.ஜி.சி மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டு அதன்படி
₹.3,75,000 (ரூபாய் மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ) பெறப்பட்டு இத் தொகையானது கீழ்கண்டவாறு அவ்வமைப்புகளுக்கு பிரித்து அவ்வமைப்புகளின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து அதற்கான ரசீது பெறப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் அல்லாஹ் ...
1. IIM பைத்துல்மால். - ₹.70,000
2. காயல்பட்டணம் பைத்துல்மால் -₹.70,000
3. காயல்பட்டணம் தாவா சென்டர் - ₹.55,000
4. IQRA. - ₹.50,000
5. SHIFA. - ₹.35,000
6. K.M.T.மருத்துவமனை -₹.35,000
7. துளிர் சிறப்பு பள்ளி - ₹.30,000
8. இமாம் & மு அத்தின் நல நிதி - ₹.30,000
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|