வழிபாட்டுத் தலங்களில் கூம்புக்குழாய் ஒலிபெருக்கி பயன்பாடு தொடர்பாக, அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்க தீர்மானங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் இடம் SDPI கட்சி சமர்ப்பித்துள்ளது.
11.07.2017. செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த SDPI கட்சியின் நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிவாசல்களில் நீதிமன்றம் அனுமதித்துள்ள ஒலியளவிலேயே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அது தொடர்பாக காவல்துறையினர் பள்ளிவாசல்களுக்கு இடையூறு செய்யாமல் இருக்க ஆவன செய்யுமாறு கோரினர்.
அத்துடன், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக கோவில் கட்ட முயற்சிக்கும் சமூக விரோதச் செயலைத் தடுத்து நிறுத்துமாறும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இக்கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதன்போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக, SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின்போது, ஜமாஅத் நிர்வாகிகள், SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
தகவல்:
H.சம்சுதீன்
மாவட்ட பொதுச்செயளாலர்
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்
|