தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு குடும்ப அட்டையில் (Ration Smart Card) திருத்தங்கள் செய்ய, இ-பொது சேவை மையங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
புதிய மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்கல், சேர்த்தல், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் இ-சேவை மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அவ்விண்ணப்பங்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்த பிறகு விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
குறுஞ்செய்தி கிடைக்கப் பெற்றவுடன், தமிழ்நாடு அரசு கேபிள் டீவி நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இ-சேவை மையங்களில் 30 ரூபாய் கட்டணம் செலுத்தி, திருத்தப்பட்ட குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|