செய்தி: விருந்துகளில் எஞ்சும் உணவுகளையும், நன்மையை நாடி வழங்குவோரின் உணவுகளையும் / உடைகளையும் பெற்று, தேவையுடையோருக்கு வினியோகிக்க, ‘அல்அன்ஸார்’ அமைப்பு துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (kayalpatnam )[22 August 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45749
நேற்று குருவித்துறை பள்ளிவாசலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் எனக்கு நன்றியுரை ஆற்றும் வாய்ப்பை மணவீட்டார் வழங்கி கௌரவித்தார்கள்.
அங்கே நான் உரையாற்றும்போது LA QADH KAANA LAKUM FEE RASOOLULLAAHI USVATHUN HASANAA என்று அல்லாஹ் சொல்லும் சுருக்கமான ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள செய்தியை சொன்னேன் நபிகள் நாயகம் அவர்கள் வாழ்வில் காலை கண் விழித்தது முதல் இரவு கண் துயிலும் வரை எல்லா நிலையிலும் முன்மாதிரி இருக்கிறது என்று இறைவன் சொல்வதை அறிந்து அவர்களை பின்பற்றிவாழ்வதற்கு நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.என்று சொன்னேன். அந்த அழகிய முன்மாதிரியை பின்பற்றி இந்த al ansaar அமைப்பும் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எச்சிலை தன்னிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரன் சண்டை ரோட்டிலே...
என்று 1953 இல் கலைஞர் கருணாநிதி எழுதிய ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. இன்றும் கூட அந்த நிலை நம் நாட்டில் இருக்கிறது. நம் இஸ்லாமிய சமுதாயத்தில் இருக்கக் கூடாத ஒரு நிகழ்வு இஸ்ராப் என்னும் வீண் விரயம் அது நமது ஊரிலேயும் இருந்தாலும் மற்ற இடங்களை விட இங்கு குறைவுதான். அல்லாஹ் எல்லோருக்கும் தேவையான உணவை படைத்த இருக்கிறான். ஆனால் நம்மில் பலரும் உணவுகளை இப்படி வீண் விரயம் செய்வதால்தான் உணவு இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் நிலை உருவாக்கி உள்ளது.
''THERE IS MORE IN INDIA FOR PEOPLE'S NEEDS BUT NOT FOR PEOPLE'S GREEDS '' என்று காந்தி சொல்கிறார்.
மக்களின் தேவைக்கான உணவு இந்தியாவில் போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் மக்களின் பேராசைக்கு தேவையான அளவுக்கு இல்லை என்கிறார். உண்மையும் யதார்த்தமும் அதுதான்.
சொகுசு ஹோட்டல்களிலும் சரி சாதாரண ஹோட்டல்களிலும் சரி கல்யாண வீடுகள் முகூர்த்த நிகழ்ச்சிகள் எதுவானாலும் இந்த வீண் விரயம் நிறையவே இருக்கிறது. ஒரு பருக்கை சோறில் அல்லாஹ்வின் பரக்கத் இருக்கிறது என்று சொல்லி அந்த ஒரு பருக்கையைக்கூட கீழே விழாமல் உண்ணவேண்டும் என்று நம் முன்னோர்கள் நம்மை சிறுவயதிலேயே சொல்லி பழக்கி இருக்கிறார்கள் இப்போதும் அந்த வழக்கத்தை பெற்றோர்கள் சொல்லி கொடுக்க வேண்டும். அல்ஹம்து லில்லாஹ்.
இந்த முயற்சி பெரிய வெற்றியையும் பெரிய நன்மையையும் இந்த அமைப்பின் முன்னோடிகளுக்கு அல்லாஹ் வழங்குவானாக. இணையத்தளத்தில் மட்டுமில்லாமல் ஒரு நோட்டீஸ் வெளியிட்டு ஜும்மா பிரசாங்கங்களிலும் இதை பற்றி சொல்ல வேண்டும். நான் வாழும் பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிக்கு உரிய 1000 நோட்டீஸ்களுக்கு நான் எனது சிறிய நிதியை தருகிறேன்.
அல்லாஹ்வுக்காக. அந்த நோட்டீஸ் வடிவமைக்கும் பொறுப்பை இந்த நிறுவனமே செய்து தாருங்கள். வாழ்த்துக்களும் து ஆக்களும். ..
MANN YASHFAU SHAFAA'ATHAN HASANATHAN YAKUN LAHOO NASEEBUM MINHAA......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross