Re:...உயிரே உன் விலை என்ன? posted bymackienoohuthambi (kayalpatnam )[01 September 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45768
உயிரின் விலை மகத்தானது. எவ்வளவு லட்சங்கள் இழப்பீடு கிடைத்தாலும் இந்த உயிரை மீட்டு தர முடியாது. ஆனால் இதுவாவது இந்த குடும்பத்துக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். ஐக்கிய பேரவையின் ஈடுபாடு பாராட்ட தக்கது. அபூபக்கர் அவர்களின் ஐந்து வருட சட்டமன்ற உறுப்பினர் பதவி கடையநல்லூர் மக்களுக்கு மட்டுமின்றி நமதூருக்கும் பெரிய தொரு வரம். இந்த பதவியை அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற கவலை நம்மை பற்றிக் கொண்டுள்ளது. நடக்கின்ற ஆட்சி அவலங்கள் கோலங்கள் ஆளுநர் ஜனாதிபதி பிரதமர் எல்லோருமே ஒரு நாடகத்தின் பல கதா பாத்திரங்களாக இருக்கிறார்கள். நாடகம் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாத ஒரு சூழ்நிலையில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் அபூபக்கர் அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க கடையநல்லூர் என்ன பாடுபடுமோ என்பதை நினைக்கும்போது அடிவயிற்றில் அமிலம் சுரக்கிறது. ஏனென்றால் அவரை எதிர்த்து களம் இறங்கிய அதிமுக பிரமுகரைவிட இஸ்லாமிய சமுதாயத்தை சேந்த 10 க்கும் அதிகமானவர்கள் அவரை தோற்கடிக்க வரிந்து கட்டிக்க கொண்டு நின்றார்கள். தோல்வியின் விளிம்பில் நின்றவரை அல்லாஹ் நமக்கு வெற்றி நாயகனான மீண்டு வர செய்தான்….அந்த நூறு நிமிடங்கள் ஏதோ ALFRED HITCHCOCK திகில் நாவலை படிப்பது போல் பரபரப்பாக இருந்தது…
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross