செய்தி: தூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!! படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இழப்பீடும் வேலை வாய்ப்பும் posted bymackienoohuthambi (kayalpatnam )[08 September 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45780
சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் முயற்சியில் மீரான்தம்பி அவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் உறுதி படுத்தப் பட்டால் தமீமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். மேலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை சமுதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள அவர் தயங்கள் கூடாது. கட்சி மாறுவது அணி மாறுவது என்பது தமிழக அரசியலுக்கு புதிதல்ல.
யாருடனும் மிக நெருக்கமாகவும் இருக்காதீர்கள் யாருடனும் மிக இறுக்கமாகவும் இருக்காதீர்கள் ஏனெனில் பிறிதொரு காலத்தில் நெருக்கமாக இருப்பவர் இறுக்கமாக மாறிவிடுவார் இறுக்கமாக இருப்பவர் நெருக்கமாகிவிடுவார் என்ற கருத்துப் பட நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்தருளிய மணிமொழி ஒன்று படித்தேன்.
எனது அன்பு நண்பர் மறைந்த SK அவர்களிடம் அவரது நண்பர் ஒருவர்..''அடே, இப்படி ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறாயே, பிஜேபி யிலும் இருப்பாயா'' என்று கேட்டாராம். அவர் அதற்கு பதில் சொன்னார் ''இந்த ஊருக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் அந்த கட்சி உதவியாக இருந்தால் அந்த கட்சியிலும் இருப்பேன்'' என்றாராம். ''நான்'' ''எனக்கு'' என்று சிந்திக்காமல் இந்த ஊர் நமது சமுதாயம் என்று சிந்தித்த ஒரு அற்புதமான மண்ணின் மைந்தர் மறைந்தாலும் நமது உள்ளமெல்லாம் நிறைந்து வாழும் SK அவர்கள். தமீமுன் அன்சாரி அவர்களுக்கு SK அவர்கள் ஒரு ROLE MODEL
அல்லாஹ் உங்கள் கோரிக்கை வெற்றி பெற செய்து மீரான்தம்பி அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்த நன்மையையும் தருவானாக. ஆமீன். .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross