Re:...மூக்கில் விரல் வைத்து வியக்க வைக்கும் வரிகள் posted bymackienoohuthambi (kayalpatnam )[11 September 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45785
அரசு விதிக்கும் வரிவிகிதங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக வரிவிகிதங்களை விலாவாரியாக புள்ளிவிவரத்துடன் எடுத்துவைத்து அரசு விதிக்கும் வரிகளுக்கும் நம்மை படைத்து பரிபாலித்து நமக்கு எல்லா செல்வங்களையும் வழங்கும் அல்லாஹ் நமக்கு விதிக்கும் வரிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை சகோதரி அவர்கள் மிக தெளிவாக ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக இங்கே தந்திருப்பது மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட வைக்கிறது.
நமது பெண்களை ஆங்கிலத்தில் HOUSEWIFE என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள். அப்படிப் பட்ட ஒரு சராசரி பெண்மணியின் பேனாவின் ஆற்றல் நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. சகோதரியின் தந்தை எனது நினைவில் வாழும் மருமகன் மிஸ்பாஹி அவர்கள் அரபக தலைநகர் ரியாதில் ARAB NEWS பத்திரிக்கையில் அரபியில் கட்டுரைகள் புனைவார்கள். அரபிகளே அசந்து விடுவார்கள் ஒரு அஜமி இப்படி எழுதுகிறானே என்று. புலிக்கு பிறந்தது பூனையாகாது என்றாலும் பூனைகள் தங்களை புலிகளாக அடையாளம் காட்டிக் கொள்ள தங்கள் மேல் சூடுபோட்டுக் கொள்ளும் இந்தக் காலத்தில் சகோதரி அவர்கள் எழுத்துக்கள் நமது பெண்கள் எல்லோரும் இப்படி உலகக் கல்வி மார்க்க கல்வி இரண்டிலும் தங்கள் ஆற்றலை வெளிப் படுத்தினால் எவ்வளவு சமுதாய முன்னேற்றங்கள் ஏற்படுமே என்று நான் நினைக்கிறேன். அதற்கான வடிகால்களை நாம் செய்து கொடுக்கத் தவறி விட்டோமோ என்று கூட எனக்கு ஒரு நெருடல் ஏற்படுகிறது.
நாடு போகிற போக்கில் ஆங்கில மாதங்கள் ஜனவரி பெப்ரவரி என்று இருப்பதால் அந்த மாதங்களில் உயரோடு இருப்பவர்களெல்லாம் இந்த அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. இந்த நிலையில் பணக்காரர்கள் அல்லாஹ் சொல்லும் ஏழை வரி ஒரு அற்ப காசு இரண்டரை சத விகிதத்தை ஒழுங்காக செலுத்தினால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்தும் தப்பிக்க முடியும் இந்த அழிந்து போகும் அரசுகளின் ஆதிக்கத்திலிருந்தும்
அநி யாயங்களிலிருந்தும் விடுபட முடியும் என்பதை இந்த கட்டுரை தெளிவாக நமக்கு சொல்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross