ஜனநாயக நாடான நமது நாட்டைப் பணநாயக நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் பல வித யுக்திகளில் ஒன்றுதான் தற்போது மத்திய அரசு நள்ளிரவில் விழா கொண்டாடியவாரே ஜனாதிபரியின் ஒப்புதலோடு அமுல்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு சேவை வரி.
'ஒரே நாடு”, 'ஒரே வரி”, 'ஒரே சந்தை”, 'ஓரே விலை” என்ற பெயரோடு 5%, 12%, 18%, 28%, எனும் 4 வித படித்தரங்களுடன் உற்பத்திவரி, விற்பனைவரி, கலால் வரி, வாட்வரி, சுஸ்கவரி, கொள்முதல் வரி, நுழைவுவரி போன்ற பலவித வரியணைத்தையும் ஓரங்கட்டிவிட்டு காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்கள் அனைத்திலும், யு+னியன் பிரதேசங்களிலும் பல வித எதிர்ப்புக்கள், ஆதரவுகள், குழப்பங்கள், சர்ச்சைகளுக்கிடையே ஜி.எஸ்.டி எனும் இவ்வரிவிதிப்பை அமுல்படுத்தி அரசுக்கு 14% வருவாயை கூடுதலாக பெற்று மத்திய மாநில ஆகிய இரண்டு அரசுக்களும் சரிபாதியாக பிரித்தெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15க்குள் இருபது இலட்சத்திற்கு மேல் வணிகம் செய்யும் வர்த்தகர்கள் அனைவரும் ஜி.எஸ்டியின் கீழ் பதிவு செய்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.
இதன் தெளிவான விவரங்களைப் பற்றி வணிக வரித்துறை அலுவலகம் முழு விவரிமளித்து வருகின்றன. இவ்வளவு காலம் நமது வருவாய்க்கும், செலவுக்கும் சேர்த்து நாம் அறிந்து வரி எனும் பெயரிலும், அறியாது பல்வேறு பொருட்களுக்கு எம்.ஆர்.பி என்ற பெயரிலும் நேர்முக, மறைமுக வரிகளை அரசுக்கு மாநிலங்களுக்கு மாநிலம் வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையினை செலுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டியினால் பெரும் வணிகர்கள் முதல் சிறு.குறு வியாபாரிகள் வரை பாதிப்படைவதன் எதிரொளியாக ஆங்காங்கே போராட்டங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தாலும் அரசின் நிலைபாட்டில் மாறுதலைக் காணமுடியவில்லை.
ஏற்றுமதிக்கு வரி இல்லை, இறக்கு மதிக்கு வரியுண்டு என்றும், ரெயில், பேருந்து, உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உலர் பழங்கள், ரொட்டி, உப்பு, பொரி, அரிசி, பழங்கள், சர்கரை மற்றும் கல்வி, மருத்துவம், மதுபானம், பெட்ரோல், பதிவுத் துறை முத்திரைக் கட்டணம் ஆகியவற்றிற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உரத்திற்கு 12 லிருந்து 5% மாக குறைக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையில் நுஸல் மற்றும் காட்டனுக்கு 5% ரெடிமேட் ஆடைகளுக்கு 12% பட்டாசிற்கு 28%, தீப்பெட்டிற்க்கு, 18%, கம்யூட்டர் மற்றும் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு 18% கடலைமிட்டாய்க்கு 18% வெற்றிலைக்கு 5%, நாப்கின் 12%, தொலைபேசி மற்றும் கிரெடிட் கார்ட்க்கு 18% சினிமாத் துறையில் குறைந்த கட்டணத்திற்கு 18% மல்டிபிளாக் தியேட்டர் அதிக கட்டணத்திற்கு 28% போக மாநில அரசின் கேளிக்கை வரியாக 30%, உணவகத்தில் குளிர்சாதன வசதியற்றவற்றிக்கு 12%, குளிர்சாதன வசதியுள்ள உணவகத்திற்கு 18% அதிலும் இனிப்பு 5%, காரம் 12%, தேனீருக்கு 5%, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரங்களான சர்கர நாற்காளிக்கு 5% பார்வையற்றோருக்கான பிரைல் தட்டச்சிற்கு 15% குடைக்கு 12% சிமெண்டிற்க்கு 31% என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அரசுக்கு நமது வீட்டிற்க்கும், சொத்துக்களுக்கும், அலுவலகளிகளுக்குரிய வரியினைச் செலுத்தி வருகிறோம். தவறும் பட்சத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரெடியாக சோதனை நடத்தி பலவித கெடுபிடிகளை கையாண்டு அபராதம் விதிப்பதை அடிக்கடி ஊடகங்களில் வெளிவரும் செய்தி மூலம் அறிகிறோம். இவ்வாறான சிக்கல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள நம்மில் பெரும்பாலோனர் ஆடிட்டர் மூலம் தமது சொத்துகளின் விவரங்களையும், அதன் வரவு செலவு கணக்குகளையும் முறையான ஆவணங்களுடன் வருமான வரித்துறையினரிடம் தாக்கல் செய்து வரி விதிப்பிலிருந்து தப்புவதற்காக செலவு கணக்கை வரவுடன் சமன் செய்து தம்மைப் பாதுகாத்து கொள்கின்றனர். இவ்வாறான நாட்டிற்கு நாடு, ஆட்சிக்கு ஆட்சி வேறுபடுகின்ற வரிவிதிப்பினை அரசின் கட்டாயத்திற்காகவும், செலுத்தாவிடில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு பயந்து நாம் விரும்பியோ, விரும்பாமலோ நடைமுறைபடுத்தித்தான் கொண்டிருக்கிறோம்.
இச்சூழலில் நமது இறைவனால் நமக்கு விதியாக்கப்பட்ட 'ஜகாத்” எனும் 'ஏழைவரி”யைப் பற்றி அறிந்திருந்தும் ஒருசாரார் அதனை நடைமுறைபடுத்தி கால தாமதமாக்குவதும், மறுப்பதும் தெரியாவிடில் மார்க்க அறிஞர்களிடம் முறையாக விளக்கம் பெற முனையாமல் 'பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்ற எண்ணத்துடன் ஏதோ வாழ்ந்துகொண்டிருப்பதை எண்ணும்போது வேதனையளிக்கிறது ஒருபுறம் இப்படி கண்டுக்கொள்ளாமலிருக்க மறுபுறம் கணக்கிட்டு கொடுத்தது போக மீதத்தை 'சதகா” என்ற பெயரில் குடும்பத்தினருக்கும், ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், இறை இல்லங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும், மருத்துவத்திற்கும், பொது நல காரியங்களுக்கும் சிலர் வாரிவாரி யாருக்கும் அறியா வண்ணம் வழங்குவதை எண்ணி நம் உள்ளம் உவகையடைவதும் உண்மைதான். இவ்விரு சாரருக்குமிடையில் இன்னொரு கூட்டம் 'ஜகாத்” எனும் வரிலித்துடன் சட்ட திட்டங்களை அறியாது, மதிப்பினை கணக்கிடாது நாம்தான் கொடுக்கிறோமே, இது அதில் சமனாகாது என்றறியாது கொடுத்துக் கொண்டிருப்பதும் வேதனையளிக்கத்தான் செய்கிறது. நாம் செயல் முறைப்படுத்ததானே இறைவன் அளவு நிர்ணயித்துள்ளான். இல்லாவிடில் நீங்கள் அதிக மதிகம் கொடுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கலாம். ஆகவே நிபந்தனையாக்கப்பட்ட, நிர்ணயிக்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு கொடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் நபிதோழர் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹூ அவர்களது ஆட்சியின்போது “ஜகாத் கொடுக்க மறுக்கும் மக்களோடு போர்புரிவேன்!”என்று கூறினார்கள். அவர்களது இந்த வார்த்தையிலிருந்து 'ஜகாத்’தின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடிகிறது.
ஹிஜ்ரி 2இல் மதீனாவில் கடமையாக்கப்பட்ட தூய்மைப்படுத்தப்படுத்துதல், பரிசுத்தப்படுத்திதல் எனும் பொருள் தரக்கூடிய 'ஜகாத்” எனும் ஏழைவரியினைச் செலுத்த முஸ்லிமான, அடிமையல்லாத சுதந்திரமான, ஜகாத் கொடுக்க வேண்டிய 'நிஸாப்” எனும் அளவை அடைந்துள்ள, தன்னிடமுள்ள பொருளுக்கு முழு சுதந்தரமுள்ள, கடனில்லாத (கடனிருந்தால் அப்பொருளை விற்று முதலில் கடனையடைக்க வேண்டும். ஒரு வருடம் தன்னிடமுள்ள செல்வம் பயன்படுத்தப்படாமல் அப்படியே பாதிக்கப்பட்டிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் 'ஜகாத்”த்தை கொடுக்க கடமைப்பட்டவர்களாவார்கள். இறைவன் தனது மறையில் அதீத இடங்களில் தொழுகையைப்பற்றி கூறும்போது அத்துடன் ஜகாத்தையும் குறிப்பிடுகிறான். தொழுகையை நிலை நிறுத்தி, ஜகாத்தை கொடுத்து வாருங்கள் (2:43,2:11,9:11) என்று!
ஐந்து கடமைகளில் ஒன்றான 'ஜகாத்” தை நிறைவேற்றாது அதனை மறுத்தவன் அல்லாஹ் மற்றும் இவனது தூதருக்கு மாறு செய்தவனாக இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறான் மேலும் இது நயவஞ்சகனின் பண்பு என்றும் நபிமொழி எடுத்துரைக்கிறது. முஸ்லிமாக இருந்த நிலையில் ஜகாத் பற்றி அடிப்படை அறிவின்றி கொடுக்காமலிருப்பவர் அதன் சட்டதிட்டங்களை மார்க அறிஞர்களிடம் சென்று கேட்டறிந்து உடனே நிறைவேற்ற வேண்டும். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவரும் இவ்வாறே செயல்பட வேண்டும். இவ்வரு காரணமின்றி முஸ்லிமாகிய ஒருவன் நன்கறிந்த நிலையில் ஜகாத் கொடுக்காது மறுத்தால் இஸ்லாமிய ஆட்சி நடைபெறக்கூடிய நாடாக இருப்பின் இவனிடம் வலுக்கட்டாயமாக ஜகாத்தைப் பெற்று, மூன்று நாட்கள் அவன் திருந்தி ஏற்றுக்கொள்ள அவகாசம் அளித்து, திருந்தாவிடில் மரண தண்டனை விதிப்பது நியதி.
பரிசுத்தப்படுத்துதல் எனும் பொருள்தரக்கூடிய 'ஜகாத்” தை நாம் முறைப்டி கொடுப்பதால் நம்செல்வங்கள் தூய்மையடைவதோடு, கஞ்சத்தனம், கருமித்தனம் மற்றும் பேராசையிலிருந்து நம் உள்ளம் பரிசுத்தமாகி இரக்கம் பிறந்து தூய்மையடைகிறது. மேலும் நம் செல்வங்களும் தூய்மையடைந்து 'ஜகாத்” தை கொடுக்காவிட்டால் அச்செல்வத்தை அழித்து விடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “எவருடைய செல்வத்தில் ஜகாத் சேர்த்து விடுகிறதோ அந்த செல்வத்தை அழிக்காமல் விடாது!” என நபிகளார் எச்சரித்ததாக அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதையும், மேலும் மழையைத் தராது பஞ்சத்தை அல்லாஹ் ஏற்படுத்திவிடுவான் என்ற நபிமொழியையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இருப்பதைக் கொடுத்தால் குறைந்து விடுமே என்று அஞ்சுபவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் கேடுதான். 'தருமம் செய்யுங்கள், அதை நான் வளர்கிறேன்” என இறைவன் கூறும் வார்த்தையை நாம் நமது வாழ்வியலில் என இறைவன் கூறும் வார்த்தையை நாம் நமது வாழ்வியலில் நடைமுறைப்படுத்தினால் நாம்தான் பெரிய செல்வந்தர்.
ஜகாத் பெற தடை விதிக்கப் பெற்ற முஹம்மத் நபியவர்கள் கூறுகிறார்கள், “என்னிடம் உஹது மலையளவு செல்வமிருந்தாலும் கூட நான் 3 திர்ஹங்களுக்கு மேல் வைத்துக் கொள்ளமாட்டேன்!” என்று. ஒரு கிராமவாசி நபியவர்களிடம் வந்து, “நபியே! ஒரு செயலைச் செய்தால் நான் கவனத்தில் நுழைய வேண்டும்... அது என்ன?” என்று வினவ, நபியவர்கள் “இணை வைக்காதீர்கள், தொழுகையை நிலை நாட்டுங்கள், உறவைப் பேணுங்கள்!” என்று கூறியதோடு, ஜகாத்தை நிறைவேற்றுங்கள் என்று கூறிய அப்பொன்மொழியிலிருந்து - சுவனத்தில் நுழைய அழகிய வழிகளில் ஒன்று ஜகாத்தை கொடுப்பது என்பதை நாம் அறியலாம்.
நம்மிடமுள்ள தங்கமானது 85 கிராம் (10.5 பவுன் அடைத்துவிட்டால் அது ஜகாத் கொடுக்க தகுதியாகவிட்டது. அதிலிருந்து 2.5% கணக்கிட்டு தங்கமாகவோ, பணமாகவோ கொடுத்தாக வேண்டும். வெள்ளி 612க்கு 2.5%மும் கொடுக்க வேண்டும்.
“எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் வழியில் செலவிடாதிருக்கின்றனரோ அவர்களுக்கும் (நபியே) நீர் நோவினையளித்திடும் வேதனையைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக!” (9:34) நகையணியக் கூடிய பெண்கள் தத்தமது நகைக்கு தாமே ஜகாத் கொடுக்கக்கூடிய பொறுப்பாளியாவார்கள். கணவர் நமது நகைக்கு விரும்பி ஜகாத்தை கொடுத்தால் அது நிறைவேறிவிடும். மாறாக கண்டுக்கொள்ளாமலோ, நீதான் கொடுக்க வேண்டுமென்றோ கூறிவிட்டால் நமது சுய சம்பாத்தியம் இல்லாத நிலையில் இருந்தால் கூட நம்மிடமுள்ள நகையை விற்றாவது நிஸாபிற்குரிய அளவை பணமாகவோ அல்லது தங்கமாகவோ கட்டாயமாக கொடுத்தாக வேண்டும். ஒரு பெண் நபியவர்களைச் சந்திக்க வந்தபோது, அப்பெண்ணை நோக்கி, அவளது குழந்தையின் கையில் அணிவிக்கப்பட்டிருந்த வளையலைப் பார்த்து, “நரக நெருப்பினாலான அணிகலண்களை அணிந்துள்ளீர்களே?” என்று கூறியதும் இப்பெண் பயந்து அதனைக் கழற்றி 'ஜகாத்” கொடுத்ததாக நபிமொழி பகர்கிறது நம்மிடமுள்ள பணம் 1வருட காலம் செலவழிக்காது பூர்த்தியாகியிருந்தால் அதற்குக் கணக்கிட்டு 2.5% ஜகாத் கொடுத்தாக வேண்டும். உரிய நேரத்திற்கு பின்பும் காலம் தாழ்த்தாது உடனடியாக கொடுத்தாக வேண்டும்.
சொந்த வீட்டிற்கும், நிலத்திற்கும் (வியாபார நோகமில்லாத) தானியங்களுக்கும், புதையலுக்கும் தாமாக உணவு கொடுத்து வனர்கக்கூடிய கால்நடைகளுக்கும் 'ஜகாத்” கிடையாது. வியாபர பொருட்களுக்கும், வியாபார பணத்திற்கும், வியாபார நோக்கிலுள்ள சொத்துக்களுக்கும் 'ஜகாத்” கொடுத்தாக வேண்டும். ஒட்டகம், ஆடு, மாடு போன்றவற்றுக்கும் 'ஜகாத்” கொடுப்பது கடமை அதற்குரிய கணக்கின்படி!
“ஜகாத் எனும் வரியை வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதற்காக (வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற வேலைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய உள்ளங்கள் இஸ்லாமின்பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றனவோ அவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவோராக) இருப்பவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியனவாகும். (இது) அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும். அல்லாஹ் (அனைத்தையும்) அறிந்தோனும், ஞானமுள்ளேவனுமாவான்”. (9.60)
மேற்கூறப்பட்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் ஜகாத் பெறத் தகுதியுடையவர்களாவார்கள். இவ்வாறானவர்களுக்கு நமதூரில் இயங்கும் பைத்துல்மால்கள் அழகிய முறையில் உதவிகளைப் புரிந்து அறப்பணியாற்றுவது இவ்விடம் நினைவுகூரத்தக்கது. வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நமதூர்வாசிகள் காயல் நல மன்றங்கள் சார்பாக தொலைநோக்குப் பார்வை அடிப்படையில், பல இலட்சக் கணக்கில் பணங்களையும், பொருட்களையும் பெருவாரியாக அள்ளிக்கொடுத்து வறியவர்களின் துயர்துடைத்து வருவதை மறக்க முடியாது.
'ஜகாத்” கொடுக்காதவன் இவ்வுலகிலேயே பஞ்சத்தாலும் மழையின்றியும், அவனது சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சோதனைக்குள்ளாக்கப்படுவது மட்டுமின்றி, மறு உலகில் அவன் எப்பொருள்களுக்கு ஜகாத் கொடுக்கவில்லையே அப்பொருட்களாலேயே தண்டிக்கப்படுவதாக நபிமொழிகள் கூறுகின்றன. இதன் கருத்து என்னவெனில், தங்கம் வெள்ளியாக இருப்பின் அது நரக நெருப்பினால் உருக்கப்பட்டு அவளது நெற்றியிலும், முதுகுகளிலும், விலாப்புறங்களிலும் ஊற்றப்பட்டு வேதனை செய்யப்படும்... அவளது சொத்துக்கள் கழுத்திலே தொங்கவிடப்படும். ஒட்டகங்கள் நன்கு கொழுத்த உடம்புகள் பயமுறுத்தக்கூடிய பயங்கர சப்தமிட்டுக் கொண்டே ஓடி வந்து தனது கால்களால் அவனை உதைத்தும், பற்களால் கடித்தும் மிக்க கொடூரமாகத் துன்புறுத்தும்... ஆடு, மாடுகளும் நன்கு கொழுத்த உடம்புகள், கூரிய கொம்புகளுடன் ஓடிவந்து அவனை முட்டியும் மிதித்தும் துன்புறுத்தும்... மேலும் அச்சொத்துக்குளும், நகை, பணங்களும் 'பாம்பு” வடிவில் அவன் முன் வந்து கொட்டியவாறு அவனது கடைவாய்ப் பற்களைப் பிடித்து இழுப்பதாகக் கூறும் இவ்வாறான நபிமொழிகளை சில மணித்துளிகள் நம் கண்முன் கொண்டு வந்து கற்பனை செய்து பார்த்தால், உள்ளம் பதைபதைப்பதை உணரலாம்.
நம் பிள்ளைகளுக்காக என்று பார்த்து பார்த்துச் சேர்த்து வைக்கும் சொத்துக்களுக்கும், நகைகளுக்குமுரிய 'ஜகாத்” தையும் முறைபடி நாம் கொடுப்பதோடு மட்டுமின்றி நம் பிள்ளைகளுக்கும் இவ்வறிவினை ஊட்ட வேண்டும். உரிய முறையில் சீராக 'ஜகாத்” கொடுத்து வருபவர்களுக்கு இறைவன் 'சிறந்த கூலியை கொடுப்பானாக” என்ற பிராத்தனையுடனும், தவறியவர்கள் தாமதிக்காது மார்க்க அறிஞர்களிடம் இது பற்றிய ஆலோசனைகளைப் பெற்று, போர்க்கால அடிப்படையில் ஊக்கத்துடன் செயல்பட்டு, உரியவர்களிடம் உரிய தொகையினை ஒப்படைத்து, தம்மையும் - தம் பொருட்களையும் தூய்மையாக்கி, தூயவனாம் அல்லாஹ்வை தூய்மையான நிலையில் சந்திக்க இக்கட்டுரையின் ஊடாக வேண்டுகோள் விடுக்கிறேன்... |