செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...DHIL KAA RAAJA ! posted bymackienoohuthambi (kayalpatnam )[13 September 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45806
மீரான் மாமா அவர்களை பம்பாய் மாணிக்க வியாபாரிகள் DHIL KAA RAAJAA ..இப்படித்தான் பாராட்டுவார்கள்.
2017 இல் நின்று மீரான் மாமாவின் ஆளுமைகளை பற்றி பேச முடியாது. 1980 களில் பம்பாயில் அவர்களது இதயம் கவரும் ஆதிக்கம் யாரையும் கட்டிப் போடும் வசீகரம் எதற்கும் எந்த நிலையிலும் டென்ஷன் இல்லாது பேசும் இயல்பு எல்லாவற்றையும் அணுவணுவாக பார்த்து ஆச்சரிய பட்டு ரசித்து அனுபவத் பட்டவன் நான்.
''கொட்டிக் கிடக்குது சவூதியிலே ..'' என்று அங்கு சென்று அள்ளி வருவதற்குப் புறப்பட்ட கூட்டங்களில் பம்பாயில் சங்கமமான காயல்வாசிகள் படை எடுப்பை சமாளிக்க முடியாமல் திணறிய பம்பாயில் எங்களுக்கு தங்க இடம் தூங்க இடம் பொங்க இடம் கொடுத்து எண்னை போன்ற அகதிகளை அரவணைத்த இடங்கள் ஸ்வஸ்திக் சேம்பேரில் இரண்டு இடங்களை சொல்லலாம். ஒன்று ஸ்டார் இல்லம் இங்கு இருந்து தொழில் புரிந்த ஹசன் மாமா அவர்கள் அடுத்தது ஷாபி மீரான் அறை
இரண்டாவது மாடியிலே அந்த அறை இருந்ததால் எங்களுக்கு அது வசதியாக இருந்தது. இங்குதான் மீரான் மாமா அவர்களின் ஆஸ்தானம். பகலெல்லாம் வெளியே சுற்றி வேலை தேடி வேதனை பட்டு வந்து படுக்கும்போதெல்லாம் அவர்கள் நமது இதயத்தை வருடி விடுவார்கள். விடுடா மருமகனே, இதை விட மேலான இடம் உன்னை தேடி வரும் என்பார்கள்... நாம் படும் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் இவர்கள் அந்த புண்ணுக்கு மருந்து போடும் விதமே தனி. தொழிலும் அப்படித்தான் விற்றாலும் விற்ற கல் திரும்பி வந்தாலும் வாங்கியவர் பணம் தந்தாலும் தருவதற்கு சுணங்கினாலும் எல்லா நிலையிலும் நிதானம் இழக்காமல் அமைதியாக பேசுவார்கள்.எப்படி இவர்களால் அப்படி இருக்க முடிகிறது நான் ஒரு கணம் யோசித்துப் பார்ப்பேன். அல்லாஹ்வின் மீது அசையாத தவக்கல்..நம்பிக்கை ஆவதெல்லாம் நன்மைக்கே என்ற அழுத்தமான இறை நம்பிக்கை அவர்களின் அமைதியான நிதானமான அணுகுமுறைக்கு அதுவே சூத்திரமாக இருந்தது. நமக்கு எல்லாம் இழந்த பிறகு வரும் நம்பிக்கை அவர்களுக்கு ஆரம்பத்திலேயே வந்து விடும். இதை தவிர அவர்களை பற்றி சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது. மர்ஹூம் அவர்களின் திருமுக்கத்தை இறுதியாக பார்த்து பேச அல்லாஹ் தியாக திருநாளில் ஒரு சந்தர்ப்பம் தந்தான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.
மர்ஹூம் அவர்களின் மண்ணறையை அல்லாஹ் சுவர்க்க பூங்காவாக ஆக்குவானாக அவர்கள் செய்த நல்லவைகளை கபூல் செய்வானாக அவர்கள் குற்றங்களை மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஷாபிஈ மாமா அவர்களுக்கும் மருமகன் நிஜாம் அவர்களுக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross