திருக்குர்ஆனை சுமந்திருக்கும் நெஞ்சமல்லவா posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[21 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4582
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
8ஆம் வகுப்பு அரசுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவிகித தேர்ச்சி பெறச்செய்திட்ட மதரஸாவின் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள். அதற்கு உதவி செய்திட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அல்ஹம்துலில்லாஹ்.
10ஆம் வகுப்பு SSLC தேர்வை எழுதி, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களனைவரும் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.
“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் மக்களை சேர்த்து உலக கல்வியை கற்பதுடன் மார்க்க கல்வியையும் கற்க வழி செய்யலாமே. அதன் மூலம் உங்கள் மக்களும்
ஹாஃபிழ்களாகி - அவர்கள் மேல் படிப்புகளை மிக சுலபமாக படித்து பல பட்டங்களைப் பெறலாம்.
-----------------------------------------------------
மக்களே!
எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் சேர்ந்து திருக்குர்ஆன் மனனம் செய்து பட்டம் வாங்கி, மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர்ந்து படித்து இஞ்சினியராகி சவூதி அரேபியா சென்றார். அங்கே வேலை செய்துகொண்டே எம்.பி.ஏ. படித்தார் , பரீட்சை எழுதுவதற்காக ஊருக்கு வந்து மாஷா அல்லாஹ்! 20 பரீட்சைகளை ஞாயிற்றுக்கிழமை உட்பட காலை, மதியம் என்று தொடராக எழுதி அல்லாஹ்! உதவியால் எல்லா பாடங்களிலும் தேர்ச்சிபெற்று பாசாகிவிட்டார் அல்ஹம்துலில்லாஹ்.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் - இறைவனின் மறையை மனனம் செய்தவருக்கு மனன சக்தி அதிகமாக இருக்கும் என்பதை அறியவும் , சாதாரண மாணவருக்கும் திருக் குர்ஆனை மனனம் செய்தவருக்கும் மிகப் பெரும் அளவில் மனனம் செய்வதில் வித்தியாசமிருக்கும் என்பதை தெளிவுப் படுத்தவுமே.
சாதாரண மாணவருக்கு இரண்டு நாள் தொடராக பரீட்சை என்றால் தடுமாற்றங்கள் ஏற்படும் ஆனால் மேலே குறிப்பிட்ட மாணவருக்கு தொடராக காலை, மதியம் என்று இடைவிடாது 20 பரீட்சைகள் எழுத முடிந்ததென்றால் மாஷா அல்லாஹ்! அது இறைவனின் கொடை அல்லவா! அவனின் வேதத்தை சுமந்திருக்கும் நெஞ்சமல்லவா!!.
நீங்கள் உங்கள் மக்களை எந்த தயக்கமுமின்றி -“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ் சேர்த்து உங்கள் மக்களை திருக் குர்ஆனை மனனம் செய்ய வைத்து, அதன் பின் பள்ளிக் கல்வியையும் கற்க செய்வீர்களாக அதன் மூலம் இம்மை , மறுமைப் பேறுகளை பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross