காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவிலிருந்து, 8ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!
“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ESLC (8ஆம் வகுப்பு) அரசுத்தேர்வெழுதிய எம் மத்ரஸா மாணவர்கள் அனைவரும் இறையருளால் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது எம் மத்ரஸாவின் 100 சதவிகித தேர்ச்சியாகும்.
இவர்களுள் சிலர், புனித குர்ஆன் மனனத்தை முடித்து, வரும் 23.05.2011 அன்று ஸனது (பட்டம்) பெறவுள்ள நிலையில், 10ஆம் வகுப்பு SSLC தேர்வையும் தனித்தேர்வர்களாக எழுதி, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களனைவரும் வெற்றி பெற தாங்கள் யாவரும் வல்ல இறையோனிடம் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்பானவர்களே! இந்த அரிய வாய்ப்பு உங்கள் மக்களுக்கும் கிடைக்கட்டுமே...?
இறைமறை திருக்குர்ஆன் அவர்களின் இதயங்களிலும் பதியட்டுமே...??
திருமறை குர்ஆனை மனனம் செய்துகொண்டே அரசுத் தேர்வும் எழுதட்டுமே...???
அதற்கு அரிய சந்தர்ப்பம் இது! ஆம், எம் மத்ரஸாவில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைவான விளக்கம் பெற்றிட நேரில் வாருங்கள் என உங்களை உள்ளன்போடு அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மத்ரஸா நிர்வாகம் சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு S.M.S.தவ்ஹீத்,
ஆசிரியர்,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்,
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகம்,
காயல்பட்டினம். |