பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் விடுமுறைக் காலங்களில், இஸ்லாமிய மார்க்க ஒழுக்கப் போதனைகளைக் கற்பிக்கும் பொருட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம். இறைமறை குர்ஆனை மனனம் செய்வதற்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு) பிரிவும் இம்மத்ரஸா நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மத்ரஸாவின் மார்க்க விழாக்கள் இம்மாதம் 21, 22, 23 தேதிகளில் நடைபெறுகிறது. விழாவிற்கு அழைப்பு விடுத்து மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் நல்லருள் நிறைவாய் சூழ்க!
ஹாமிதிய்யா ஒரு கல்விக்கூடம்... மார்க்க அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்தல், அருள்மறை திருக்குர்ஆன் ஹிஃப்ழு (மனனம்) செய்வித்தல், பொது அறிவு கற்பித்தல், பொதுநலப் பணிகள் மேற்கொள்ளல் – இவற்றுடன், பள்ளி-கல்லூரி படிப்புகளை தொய்வின்றி தொடரச் செய்தல்... இவையே இதன் முக்கிய நோக்கங்கள்!
இந்நிறுவனம் தென்னிந்தியா, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிகு காயல்பட்டினத்தில், புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதன் 42ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு இக்கல்வி நிலையத்தின் மகத்தான மார்க்க விழாக்கள் மீலாதுந்நபி, மீலாது கௌது, மீலாது ஹாமித் ஒலியுல்லாஹ், அருள்மறை திருக்குர்ஆன் பட்டமளிப்பு ஆகிய விழாக்களை இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 21, 22, 23 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய தினங்களில் சிறப்புற நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான சன்மார்க்க நிகழ்ச்சிகள், போட்டிகள், கண்கவர் மாணவர் பேரணி, மாணவர் உடற்பயிற்சி, அருள்மறை திருக்குர்ஆனை அகத்தில் பதித்த 6 மாணவர்களுக்கு “ஹாஃபிழுல் குர்ஆன்” ஸனது - பட்டம் வழங்கல், இலவச வகைகள் வழங்கல் ஆகியன இதன் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன.
அனைவரும் வாருங்கள்! அல்லாஹ்வின் பேரருளைப் பெற்றேகுங்கள்!!
வளர்ந்து வரும் மாணவச் செல்வங்கள் சிறந்துயர்ந்திட வாழ்த்துங்கள்! துஆ செய்யுங்கள்!!
இவ்வுயரிய பணிகள் செவ்வனே சிறப்புற நடந்தேற, உங்களினிய நன்கொடைகளை ஈந்துதவி உறுதுணை புரியுங்கள்...
என்றும் அன்புடன்,
அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா
(மூன்றாம் தலைமுறையை நோக்கி...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23.05.2011 அன்று நடைபெறும் “ஹாஃபிழுல் குர்ஆன்” பட்டமளிப்பு விழாவின்போது பட்டம் பெறவுள்ள 6 மாணவர்கள் விபரம் பின்வருமாறு:-
(1)
ஹாஃபிழ் எம்.ஹமீத் கல்வத்தீ
த.பெ. ஜே.முஹம்மத் முஹ்யித்தீன்
5/6, இளங்கடை,
கோட்டாறு, நாகர்கோவில்.
(2)
ஹாஃபிழ் எம்.எஸ்.அஹ்மத் ஹஸன் ஷாகிர்
த.பெ. ஹாஜி எம்.எஃப்.முஹம்மத் ஸதக்கத்துல்லாஹ்
67, மரைக்கார் பள்ளித் தெரு,
காயல்பட்டினம்.
(3)
ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா
த.பெ. ஹாஃபிழ் எஸ்.ஏ.ஷெய்கு ஹல்ஜீ
110, குத்துக்கல் தெரு,
காயல்பட்டினம்.
(4)
ஹாஃபிழ் எஸ்.எம்.எல்.அபுல்ஹஸன் ஷாதுலீ
த.பெ. எஸ்.ஏ.எச்.மஹ்மூத் லெப்பை,
119, கீழநெய்னார் தெரு,
காயல்பட்டினம்.
(5)
ஹாஃபிழ் டி.என்.ஹஸனாலெப்பை
த.பெ. ஹாஜி எம்.எச்.தாவூத் லெப்பை,
183-சி, சதுக்கைத் தெரு,
காயல்பட்டினம்.
(6)
ஹாஃபிழ் எம்.ஹாமீம் ரஹீம் ஹதிய்யத்துல் ஸயீதுல் ஜல்வத்தி
த.பெ. ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஸாலிஹ்,
247, நாட்டாண்மைகாரர் தெரு,
நத்தம், மதுரை.
மத்ரஸாவில் நடைபெறும் வெளியரங்க நிகழ்ச்சிகள் அனைத்தும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவி வலைதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக மத்ரஸா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மத்ரஸா விழாக்குழு சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு S.M.S.தவ்ஹீத்,
ஆசிரியர்,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்,
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகம்,
காயல்பட்டினம். |