சாலையோரங்களில் அதிகளவில் மரங்கள் நட்டப்பட்டு வருவதால் காயல்பட்டினம் கிழக்குப்பகுதி சோலைவனமாக மாறி வருகிறது.
காயல்பட்டினம் மரைக்கார்பள்ளித் தெருவைச் சார்ந்தவர் எம்.எம்.உவைஸ். சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளம் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ள இவர், கடந்த 2009ஆம் ஆண்டில் காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவிலுள்ள மரைக்கார் பள்ளி வளாகத்தைச் சுற்றிய சாலையோரங்களில் தனது சொந்தச் செலவில் முறையான வேலி பாதுகாப்புடன் மரங்களை நட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சுவதற்காக சம்பள அடிப்படையில் பணியாளரையும் ஏற்பாடு செய்ததன் விளைவாக இன்று அப்பகுதியில் கடும் வெயில் நேரங்களிலும் நிழல் மேலிட்டு மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வளர்ந்துள்ள மரங்களால் அப்பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில், எம்.எம்.உவைஸ் கூடுதலாக காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில் 3 மரங்கள், சொளுக்கார் தெரு வில் 3 மரங்கள், கொச்சியார் தெருவில் 6 மரங்கள், மரைக்கார் பள்ளித் தெருவில் ஏற்கனவே நட்டப்பட்ட மரங்களுடன் 24 மரங்கள், தேங்காய் பண்டக சாலை தெருவில் 10 மரங்கள், ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி அமைந்துள்ள மரைக்கார்பள்ளித் தெரு குறுக்குச் சாலையில் 10 மரங்கள் என மொத்தம் 50 மரங்களை நட்டுள்ளார்.
|