பிரபல இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் தலைமையில் இயங்கும் Islamic Research Foundation - IRF அமைப்பு மூலமாக முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.
இவ்வாண்டு உதவித்தொகை பெறுவதற்கான நுழைவுத் தேர்வு மும்பை, புனே, பெங்களூரு, சென்னை, டில்லி, கொல்கத்தா, ஹைதராபாத், அவுரங்காபாத், அகோலா மற்றும் மலேகாவ்ன் ஆகிய நகரங்களில் மே மாதம் 29ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறும்.
இதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை IRF நிறுவனத்தின் மும்பை முகவரிக்கு நேரடியாக அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் சேர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் என்னவென்று குறிப்பிடப்படாவிட்டாலும், மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை விரைவாக அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம் குறித்த தகவல் எஸ்.எம்.எஸ். உட்பட பிற ஊடக வழிகள் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாதவர், தேர்வு அன்று - தேர்வு நடைபெறும் அரங்கிற்குச் சென்று, நுழைவுத் தேர்வினை எழுதலாம் என விபரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.
நுழைவுத் தேர்வில் கேள்விகள் 75 சதவீதத்திற்கும் கூடுதலாக குர்ஆன் அடிப்படையில் இருக்கும். நுழைவு தேர்வின் முடிவுகள் அடிப்படையில் நேர்க்காணல் நடைபெறும். நேர்காணலில் தேர்வு செய்யப்படும் மாணவருக்கு 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும் அல்லது IRF இணையதளத்தை அணுகவும் .
தகவல்:
ஏ.எஸ். அப்துர் ரஹ்மான் (மும்பை)
மற்றும்
எம்.எம்.செய்யித் இப்ராஹிம் (சென்னை) |