விளையாட்டுத் துறை மூலம் காயல்பட்டினம் நகரில் ஐக்கியத்தை உருவாக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் காயல் ப்ரீமியர் லீக் (கே.பி.எல்.) என்ற பெயரில் க்ரிக்கெட் மற்றும் கால்பந்து சுற்றுப்போட்டிகள், காயல்பட்டினத்திலுள்ள ஐக்கிய விளையாட்டு சங்க (யு.எஸ்.ஸி.) மைதானத்திலும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்திலும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள் 17.05.2011 அன்று காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. மைதானத்தில் துவங்கின.
முதல் போட்டியில் Star United அணியும் HI FI BOYS அணியும் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த HI FI BOYS அணியினர் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை பெற்றனர். Star United அணிக்காக சமீம் 1 மற்றும் ஜப்பார் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பசீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து பேட்டிங் செய்த Star United அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். Star United அணிக்காக பசீர் 12 ரன்களும், சமீம் 34 ரன்களும், அன்சுதீன் 14 ரன்களும் எடுத்தனர். செய்யது முஹம்மது 2 மற்றும் M.S.முஹம்மது மெய்தீன் ஆகியோர்கள் தலா 2 விக்கெட்டுகளும் செய்யது 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாவது போட்டியில் WAVOO WARRIERS அணியும் KAYAL COUNTRY CLUB அணியம் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த KAYAL COUNTRY CLUB அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை பெற்றனர். அந்த அணிக்கு கூடுதல் பட்சமாக இஸ்மாயில் 35 ரன்களை சோத்தார். WAVOO WARRIERS-ன் முஹம்மது அலி ஒரு விக்கெட்டையும் அப்துல் ஹமீத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட்டிங் செய்த WAVOO WARRIERS அணி 9-வது ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை பெற்று வெற்றியடைந்தது. அந்த அணிக்காக செய்யது இப்றாஹீம் 34 ரன்களுடனும், செய்யது முஹம்மது புஹாரி 32 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாவது போட்டியில் F ZONE மற்றும் KAYAL ROCKERS அணியினர் விளையாடினர். முதலில் பேட்டிங் செய்த F ZONE அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை பெற்றனர். அந்த அணிக்காக உமர் 37 ரன்களும், இம்ரான் 14 ரன்களும் அடித்தனர். KAYAL ROCKERS அணிக்காக சம்சுதீன், ஃபைஸல், இஸ்திஹாக், யூசுஃப் மற்றும் பிலால் ஆகியோர்கள் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த KAYAL ROCKERS அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. அந்த அணிக்காக பிலால் மற்றும் சம்சுத்தீன் தலா 13 ரன்களை சேர்த்தனர். F ZONE அணிக்காக இம்ரான், சல்மான் மற்றும் சேக்கனா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
நான்காவது போட்டியில் GREENISH COUNTY மற்றும் GALLERY BIRDS அணியினர் விளையாடினர். முதலில் பேட்டிங் செய்த GREENISH COUNTY அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்னர். அந்த அணிக்காக ஹாஜியார் முஹம்மது மெய்தீன் 15 சேக் 47 மற்றும் சாகுல் 23 ரன்களை சேர்த்தனர். GALLERY BIRDS அணிக்காக கைசாலி மற்றும் சித்தீக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினா.
தொடர்ந்து பேட்டிங் செய்த GALLERY BIRDS அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர். அந்த அணிக்காக சித்தீக் 24 ரன்களை பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். GREENISH COUNTY அணிக்காக சுலைமான், சாகுல் மற்றும் நெய்னா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர் ஜஹாங்கிர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அனைத்துப் போட்டிகளின் கால அட்டவணை, இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அணிகள் பெற்ற புள்ளிகள் மற்றும் சிறந்த ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் பின்வருமாறு:-
வி-யுனைட்டெட் சார்பாக,
செய்தி:
S.R.B.ஜஹாங்கீர்.
இதர விபரங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத். |