டெலிபோன் பில் பணம் கட்டும் ரசீதில் டெலிபோன் நம்பரை குறித்து பில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெலிபோன் லேண்ட்லைன் இணைப்புகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பணம் கட்டவேண்டும். அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அல்லது டெலிகாம் சென்டர்களில் பணம் கட்டவேண்டும். இதற்கு வழங்கப்படும் பில்லில் டெலிபோன் நம்பர் மற்றும் கட்டணம் குறிக்கப்பட்டிருக்கும். தற்போது வழங்கப்படும் பில்களில் டெலிபோன் எண் குறிக்கப்படாமல் டெலிபோன் நம்பர் என அச்சடிக்கப்பட்டு வேறு எண் பதிவு செய்யப்படுகிறது. இதனால் தங்கள் கணக்கில்தான் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர்.
இதுபற்றி, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமப்புறங்களில் லேண்ட் லைன் டெலிபோன் வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தில் பணம் கட்டுகிறார்கள். முன்பு பில் தரும்பொழுது அதில் போன் நம்பர் குறிக்கப்பட்டிருக்கும்.
சமீபகாலமாக பில்லில் போன் நம்பர் என எழுதப்பட்டுள்ள இடத்தில் வேறு நம்பர் பதிவாகியுள்ளது. அது அக்கவுண்ட் நம்பர் என கூறுகின்றனர். இது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும். அவசரத்தில் பில்போடும் ஊழியர் தவறுதலாக ஒரு நம்பரை மாற்றினாலும் பணம் வேறு நபர்களுக்குச் சென்றுவிடும்.
போன் நம்பர் பில்லில் இருந்தால் பணம் கட்டும் வாடிக்கையாளருக்கு தங்கள் கணக்கில்தான் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கை ஏற்படும். எனவே பழையமுறையிலேயே டெலிபோன் பில்லில் டெலிபோன் நம்பரை குறித்து வழங்க வேண்டும் என கூறினார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross