காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 83 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 84ஆம் ஆண்டு நிகழ்வுகள் எதிர்வரும் 04.06.2011 சனிக்கிழமையன்று துவங்குகின்றன. 03.07.2011 ஞாயிற்றுக்கிழமையன்று அபூர்வ துஆவுடன் புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறுகிறது. மறுநாள் 04.07.2011 திங்கட்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
இவ்வாண்டு நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று செயல்படுத்துவதற்காக, கடந்த 22.04.2011 அன்று மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில், ஸபை தலைவர் மவ்லவீ எஸ்.கே.ஷெய்க் அப்துல்லாஹ் ஜுமானீ தலைமையில் கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் வைபவக்கமிட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வைபவக் கமிட்டி தலைவராக மவ்லவீ எஸ்.கே.ஷெய்க் அப்துல்லாஹ் ஜுமானீ,
துணைத்தலைவராக நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம்,
மேலாளராக ஹாஜி கம்பல்பக்ஷ் என்.எஸ்.நூஹ் ஹமீத்,
இணைச் செயலாளர்களாக ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம்,
துணைச் செயலாளராக ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரும்,
வைபவக்கமிட்டி தலைவர்களாக, எம்.கே.செய்யித் முஹம்மத், ஹாஜி எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தின்போது, அண்மையில் காலஞ்சென்ற - குருவித்துறைப்பள்ளி மஹல்லாவைச் சார்ந்தவர்களான மர்ஹூம் செய்யித் அபூதாஹிர், மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.), மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் ஆகியோருக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை சார்பாக,
ஹாஜி M.S.B.முஹம்மத் இஸ்மாஈல்,
காயல்பட்டினம். |